Friday 31 May 2013

விழிப்புணர்வு உள்ள கல்வி தேவை



விழிப்புணர்வு உள்ள கல்வி தேவை


قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
  
فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ


கல்வி அவசியம் :

          மனிதன் உயர்ந்தவனாக , சமூகத்தில்  இழிவான  தாழ்ந்தவனாக  கருதபடுவது அவனிடம் இருக்கும் அறிவின் மூலம் தான் , ஒருவன் மலக்கை விட  உயர்ந்தவனாக (கண்ணியமானவனாக ) அல்லது  மிருகத்தை விட தாழ்ந்தவனாக ஆகுவது  ஒருவனின்  அறிவின் மூலம் தான் , முறையாக  அறிவை வளர்த்தால் மலக்காகிறான்  முறைகேடாக  விட்டால் மிருகமாகிறான் . எனவே  தான் மார்க்கம் அறிவு வளர்ச்சிக்கு காரணமாக  உள்ள எல்லா கல்வியைக் கற்பதற்கும்  ஆர்வமூட்டுகிறது படிப்பும் , எழுத்தும் கல்விக்கு அஸ்திவாரமாக இருப்பதால் முதல் வசனமாக இறைவன் அதைப் பற்றி இறக்கிவைத்தான் .

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ - خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ - اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ-الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ - عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ(96:1,2,3,4)


    கல்வி மனிதனுக்கு அவசியமான  ஒன்றாக  இருப்பதினால்  நபி (ஸல் ) அவர்கள் அதற்காக அனுப்பபட்டார்கள்.

فَقَالَ إِنَّمَا بَعَثْتُ مُعَلِّمًا
நான் கற்றுக் கொடுப்பவனாக அனுப்பப்பட்டுள்ளேன் (தாரமி )எனவே  கல்வியை  கற்பவர்களாக இருப்பது அவசியமாகும் .

   குரானிலும் ஹதீஸ்களிலும்  கல்வி கற்பதை  வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»
    ஹஜரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் கல்வியை தேடுவதற்காக  வெளிக்கிளம்பி சென்றவர்  திரும்பி வரும் வரை அல்லாஹ்வின்  பாதையில் இருக்கிறார் (திர்மிதி ).

    குர் அனிலும் , ஹதிஸிலும் மார்க்க கல்வியை வலியுறுத்தி சிறப்புப்படுத்தி வந்திருந்தாலும் ,
உலக கல்வியை வெறுக்குமாறு அது தடை விதிக்கவில்லை  மாறாக அவற்றை கற்றுக் கொள்வதிலும் ஆர்வமூட்டுகிறது
 إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
 (2:164) எனற வசனத்தின் கடைசியில்

    சிந்திக்கும்  சமுகத்திற்கு இதில் அத்தாட்சிகள் என்று அல்லாஹ் முடிக்கிறான். அப்படியான சிந்திப்பதை தூண்டுவது இஸ்லாமிய வேதமாகிய குர்ஆனில் மட்டுமே. அறிவு, கல்வி , ஆராய்ச்சி , சிந்திப்பது இது சம்மந்தமாக குர்ஆனில் மொத்தம் 580 இடங்களில் கூறப்பட்டுள்ளது மனித சமுகத்திற்கு பயன் தரும் எந்த கல்வியும்  இஸ்லாத்தில் தடையில்லை. பத்ருப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்ட வர்களை முஸ்லிம் களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கச் சொல்லி விடுதலை செய்தார்கள் .
ஜைத் பின் ஸாபித் (ரலி)அவர்களை யூத மொழியான சுர்யானி பாஷையை கற்குமாறு நபி?(ஸல் )அவர்கள் கட்டளையிட்டார்கள் அதை 17 நாட்களில் கற்றார்கள்.

    இப்படி ஏராளமான விஷயங்களை இஸ்லாம் கல்விக்கு கொடுக்கும் முக்கியம் பற்றி குறிப்பிடலாம்.

திட்டமான கல்வி 

           எந்த கல்விக்கும் இஸ்லாம் எதிரானதல்ல என்று நாம் சிந்தித்தால் விளங்கிகொள்ளலாம் . நம் முன்னோர்கள் விளங்கியிருந்தால் எல்லா துறைகளிலும் முதன்மை பெற்றார்கள் வரலாற்றை புரட்டிபார்தால் நம் இஸ்லாமிய பெரியார்கள் கால்பதிக்காத துறை என்று  ஒன்றும் இல்லை இன்னும் கூறினால் இஸ்லாமியர்கள் தான் உலகில் இன்றலாவிய கல்வி துறைகளின் முன்னோடிகள் என்பதுதான் உண்மையாகும் .

    கல்வி கற்பது திட்டமானதாக இருக்க வேண்டும் நபி (ஸல்) யூதர்களின்  மொழியான சுர்யாணியை ஜைதுப்னு  ஸாபிதிடம் சொன்னார்கள் காரணம் அவர்களிடம் திறமையும், நினைவாற்றலும் ,அதற்கு மேல்  ஆர்வமும் இருந்தது.

    இன்னும் சொன்னாள்  சுர்யாணி மொழியுடன், அந்த நபர்களுடன் தொடர்பு இருந்தது . பெருமானார் (ஸல்) அவர்களின் அதி நுட்பமான ஞானம் சரியாக அவர்களை  தேர்ந்தெடுத்தார்கள், அவர்களும் அந்த சஹாபியும் 17 நாட்களில் அதை முழுமையாக  கற்றார்கள் வேதமான தவ்ராத்தையும் முறையாக  யூதர்கள்  செய்த மாற்றங்களை -திருட்டுத்தனத்தை  நபி(ஸல்) அவர்களுக்கு  தெரியபடுதினார்கள் அதை கொண்டு சமுகம்  பயன்பெற்றது.

சந்கையானவர்களே!
இஸ்லாமிய சமுகத்திற்கு வருவோம்.!                                                                  

1 கல்வியை திட்டமிடுகிறோமா ?

     என்ன துறை என் தந்தைக்கு தெரியாது என் மகன் கல்லூரிக்கு போகிறான்  லட்ச ரூபாய் கொடுத்து சேர்த்துள்ளேன் அதை தவிர ஒன்றும் தெரியாது எந்த திட்டமும் இல்லாமல் சும்மா எதாவது ஒரு பட்டம் வாங்க வேண்டும் .

      என மட்டும் 90 சதவிதம்இஸ்லாமிய  பட்டதாரிகள் உள்ளார்கள். செல்வந்தர்கள் , பெரும் தொழிலதிபர்கள் பிள்ளைகள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்லுரி படிப்பு என்பது எந்த திட்டமும் இல்லாமல் பெயருக்கு பின்னால் எதாவது ஒரு பட்டம் போட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காசு பணத்தை கொட்டி கல்லுரி அனுப்பும் நிலை, படிப்பை கொண்டு சம்பாதிக்கவேண்டும் என்ற நிலை இல்லாத காரணத்தால் கல்வியில் எந்த திட்டமும் இல்லை. இப்படி பட்டவர்கள்தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் வழிதவறி போகும் விஷயத்தில் நேரத்தை பயன் படுத்தும்போது ,அவர்கள் மட்டும் அல்ல,. உடன் இருப்பவர்களும் அதனை பார்பவர்களும் வலி கேட்டு குட்டிச்சுவராகி போவதை பார்க்கிறோம்.

     இவர்களின் திட்டமில்லாத கல்வி அவர்களுக்கும் பயன் இல்லை , சமுகத்திற்கும் [பயனில்லை , மாறாக வழிதவறி விடுகிறபோது அவர்கள் குடும்பத்தார்கள் இஸ்லாமிய மார்க்கம், சமுகம் என எல்லாவற்றுக்கும் இழி சொல் ஏற்படுகிறது .


2 தேர்ந்தெடுக்கும் துறையில் ஆற்றல் உள்ளதா?
இஸ்லாமியர்கள் கல்வியை தேர்ந்து எடுப்பது என்பது நோக்கமே இல்லாமல்  சும்மா படிக்க வைக்க தான் என்பது துறையில் ஆற்றலே இல்லாத ஒரு நபரை நிர்பந்தப்படுத்துவது. 10ம் வகுப்பில் 200 மார்க் எடுத்தவனுக்கு 480 மார்க்கு எடுத்தவனின் குரூப்பை காசு கொடுத்து வாங்கி கொடுப்பது படிப்பான அவன் படிப்பவனையும் கெடுப்பான். இதே போல தான் காலேஜ் துறைகளும், உதாரணமாக +2 வில் ஐந்தாம் பிரிவு எடுத்த ஒருவன் அதில் தையல், சிறிய சிறிய கணக்கு, சமையல் இது மாதிரி பாடம் படித்தவனை கொண்டு போய் பணத்தை பயன்படுத்தி  இன்ஜினியரிங் சீட்டு வாங்கிக் கொடுத்தால் உருப்படுமா சமூகம், இவன் எப்படி படிப்பான்? அங்கு நடத்தப்படும் பாடம் எல்லாம் விளங்குமா? என்ன பலன்? இஸ்லாமிய பெண் பிள்ளைகள் இன்ஜினியரிங் படித்து என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் படித்து  படித்த வேலைக்கு போனவர்களை கணக்கெடுங்கள் 1 சதவிகிதம் வருவதும் கஷ்டம்.
                படிப்பு இவனுக்கு என்ன லாபம்? இவன் நிலைக்கு சக்தியுள்ளதா? குடும்ப சூழ்நிலைக்கு ஒத்துவருமா? சமூகத்துக்கு இந்த கல்வியை கொண்டு என்ன பலன்? என எந்த திட்டமும் இல்லாத கல்வி பயிலும் நிலை மாற வேண்டும். திட்டமான கல்வி வேண்டும் அதற்கு பட்டதாரியின் வழிகாட்டல், ஆலோசனையின்படி செல்ல வேண்டும். அல்லாஹுதஆலா திருமறையில் குறிப்பிடுகிறான்     (நபியே) நீர் அவர்களுடன் (ஸஹாபாக்களுடன்) கலந்தாலோசிப்பீராக (3:159)
                நபிக்கு அல்லாஹ் ஆலோசனை செய்யும்படி கூறியுள்ளான் எனில் நம்முடைய நிலையை பற்றி என்ன சொல்வது. நம்முடைய காரியங்களில் நாம் ஆலோசனை செய்வது மார்க்க வழிகாட்டலாகும்.
ஒழுக்கம் சார்ந்த கல்வி!
மனிதனை, மனிதனாக்குவது தான் கல்வி, மனிதனை பரிமான மாற்றம் ஏற்படுத்துவது தான் கல்வி, -யாரிடம் ஒழுக்கம் இல்லையோ அவரிடம் இல்ம் இல்லை.
                ஒழுக்கத்தை கற்றுத் தருவது தான் கல்வியாகும். ஒழுக்க கேட்டை கற்றுக் கொடுப்பது கல்வியே இல்லை. இன்றைய சூழலை பார்த்தால் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களிடம் இல்லாத ஒன்று என்றால் ஒழுக்கம் தான். கல்வி அவசியம் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அதே நேரம் ஒழுக்கம் தேவையில்லை என யார் சொல்வார்கள்? ஒழுக்கக் கேடால் எத்தனையோ ஆபத்துகள் ஏற்படுகிறது. மாணவரின் உடல் ரீதியாக, கண்ணிய ரீதியாக, எதிர்கால வாழ்வியல் ரீதியாக, சமூகம், மார்க்க ரீதியாக என ஒருவரின் ஒழுக்க கேடு பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
                ஆபத்துகளை உணராத மனிதன் - மனிதனே இல்லை.


இருபாலர் கல்வி (கோ எஜுகேசன்)

எல்லா சீரழிவுகளும் மிக முக்கியமான காரணம் என்றால் அது இந்த கலப்பு முறை கல்வி தான். இதைப் பற்றிய தெளிவு ஒவ்வொருவரும் அடைவது சமூகத்தின் அவசியமாகும். சங்கையானவர்களே! இதில் மற்றொரு முக்கியமான விஷயம் பெண் பிள்ளைகளை பெற்றோர் மட்டும் கவனம் என்பது தவறான எண்ணம் ஆண் பிள்ளைகளின் பெற்றோர்களும் தெரிய வேண்டியதும், அவர்களும் கவனம் கொள்வது அவசியமாகும்.
1.            இருபாலர் கல்வி முறை என்பது மனித வள மேம்பாட்டை தடை செய்கிறது.
2.            மார்க்கத்தில் இருபாலர் கல்வி முறைக்கு அனுமதி இல்லை.
3.            ஒழுக்க கேடான அத்துனை காரியங்களுக்கும் இந்த வழிமுறைதான் காரணம்.
4.            கல்வியை விட்டு சிந்தனை திரும்புவதற்குண்டான காரணம் என குறைபாடுகளை அடிக்கிக் கொண்டே போகலாம்.
-              கல்வி கற்பது அவசியம் தான், என்பதால் ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக போட முடியாது. ரசம் வைக்கவும் மசாலா வேண்டும். பிரியாணி வைக்கவும் மசாலா வேண்டும். இரண்டையும் தனி. தனியாக வைக்க வேண்டும். பெண் படிக்க வேண்டிய கல்வி தனியானது, நடத்தப்பட வேண்டிய வழிமுறைகளும் தனியாக அமைய வேண்டும். ஆண் அவன் படிக்க வேண்டிய துறைகள் விசாலமானது அவனுக்கு நடத்தப்பட வேண்டிய வழிமுறை கண்டிப்பானது என வேறுபடுத்த முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பின்னால் சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஸஹாபாக்கள் உம்முல் முஃமினீன் (முஃமின்களின் தாய்) ஆயிஷா (ரழி) யிடம் கேட்டார்கள். எப்படி? திரைமறைவுக்குப் பின்னால் இருந்து கேட்டார்கள்.
                இன்றைய சூழலைப் பார்த்தால் பகலில் பள்ளியில் இருவரும் ஒன்றாக பாடம் படித்துவிட்டு இரவில் இருவரும் நெட் என்னும் இணைய தளத்தில் இணைந்தவர்களாக, பத்தாதற்கு டியூஷன் என்ற ஒன்று ஒரு வாய்ப்பு வேறு இருவரும் இணைவதற்கு, தனிமை என்ற தாந்தோன்றி தனம் எதை பயிலுவார்கள்? கல்வியையா? சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதைச் சொல்வது அசிங்கம். அல்லாஹ் குறிப்பிடுகிறான் :  அல்லாஹ் ஓர் எல்லையை வைத்துள்ளான், அதை மீறுகிற போது விளைவு கடுமையாக தான் இருக்கும்.
                கல்வி பயிலுவதின் முறையும் அவசியம்.
                அல்லாஹ் ஆண் - பெண் படைப்பையே ஈர்ப்போடு தான் படைத்துள்ளான். அதனால் படைப்பே இப்படி தான் என விட்டுவிட முடியாது. பாதுகாப்புகளை ஏற்படுத்துவது நம் கடமையாகும்.
                ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்துள்ளார்கள் உடன் ஒருவரும் அமர்ந்துள்ளார் அந்நேரத்தில் ஓர் பெண் வந்து (வாலிப வயதுடையவர்) ஹஜ் செய்ய அனுமதி கேட்கிறார்கள் நபியிடம், உடன் அமர்ந்தவர் திரும்பி பார்க்க நபி (ஸல்) அவர்கள் முகத்தை திருப்பிவிடுகிறார்கள். மீண்டும் அவர் பார்க்கிறார் கைகளை கொண்டு முகத்தை திருப்பி விடுகிறார்கள்.

Wednesday 15 May 2013

சிறிய அமல்களும் பெரிய வெற்றியை தரும்



சிறிய அமல்களும் பெரிய வெற்றியை தரும்
அளவற்ற அருளாளனின் திருப்பெயரைக் கொண்டு..

                எவர் ஒரு அணுவளவு நன்மை செய்தாலும் அவர் (அங்கு) அதனைக் காண்பார் (99:7)

                அறிவியல் வளர்ந்த, அறிவு பெருகிய, சிந்தனை சிகரத்தை தொட்டுவிட்ட, விஞ்ஞானம் உயர்ந்துவிட்ட காலத்தில் மனிதன், ஓர் விஷயம் நிலையற்றது என அறிந்தால், ஓர் செயலின் ஈடுபாட்டின் மூலம் லாபம் இல்லை என விளங்கிய பின்பும், அதில் ஈடுபடமாட்டான். அதே காரியம் இவனுக்கு சுமையாக அமையும், தீங்கிழைக்க கூடியது என்றால் அதில் அவன் கண்டிப்பாக ஈடுபடமாட்டான் என்பது அல்ல அதை நினைப்பதையே வீணாக கருதுவான்.

                இறைவன் இந்த உலகை மிக சாதாரண ஓர் அற்ப பொருளாக தான் நமக்கு அறிமுகம் செய்கிறான். நிலையற்ற, நிரந்தரமற்ற, சுமையான இந்த உலகிற்கு மனிதர்களின் ஈடுபாடு என்பது அதிலும் முஸ்லிம் மக்களான இஸ்லாமியர்களின் உலக ரீதியான கவனம், ஈடுபாடு நம்மை ஆச்சரியப்படுத்துவது என்றால் இன்றைய முஸ்லிம்களின் நிலைபாட்டை பார்த்தால் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

                உலக வாழ்க்கை என்பது மறுமையின் முன் தாயரிப்பிற்குண்டானது. இதை தவறவிட்டுவிட்டால் பெரும் கைசேதம் தான், இந்த வாழ்க்கை பயணத்தில் நாம் எவ்வளவு நன்மைகளை சேகரித்து கொள்கிறோமோ மறுமை ஒளியாகும். நிம்மதியான வெற்றியை தரும்.

                இதை நாம் தவறவிட்டுவிடுகிற போது மறுமையின் கைசேதத்திற்கு அளவு கூற முடியாது.

                இதை உணர்த்தும் விதமாக தான் இறைவன் ஒவ்வொரு துறையிலும் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையை கொண்டே உதாரணம் காட்டுகிறான் போலும்...

                தேர்தல் முடிவுகள் வெளியான வாரம் 50,100 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தவர்கள் "ச்ச" என சலிப்புடன் 50 யில போய்யிடுச்சே, 100 ஓட்டுல போய்யிடுச்சே என புலம்பும் நிலையை பார்க்கின்றோம். தேர்தலுக்கு முன் எவ்வளவு உன் ஆதரவாளர்களை சேகரிக்க முடியுமோ சேகரித்து கொள். அதுவரை உனக்கு உள்ள நேரம் இப்பொழுது புலம்பி பயனில்லை.
               
                ஐ.பி.எல். சீஸன் களத்தில் இருக்கும் போது எவ்வளவு அடிக்க முடியுமோ அடித்துக் கொள் கடைசியில் 1 ரன், 2 ரன்ல போயிடுச்சே என கோபம் கொள்வது முறையல்ல.
               
                பள்ளியில் ரிஸல்ட் வெளியான நேரம் 1 மார்க்குள, இரண்டு மார்க்கல போயிடுச்சே என கை சேதப்பட்டு பிரயோஜனம் கிடையாது. உனக்கு தேர்வுக்கு முன்னால் உள்ள நேரத்தை முறையாக பயன்படுத்தி படித்திருந்தால் புலம்ப வேலையில்லை.

                தேர்தலுக்கு முன் உள்ள பிரச்சாரக்காலம், போட்டியின் களம், பரிட்சைக்கு முன் உள்ள நேரத்தை முறையாக பயன்படுத்தாதவர்கள் பின்னால் படுகிற கைசேதத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இவைகள் எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடுதான் போலும், சங்கையானவர்களே!

                எதிர்கால வாழ்வில் வளத்தை விரும்பும் ஒவ்வொருவருமே தனது அன்றாட தேவைகளுக்கு மட்டும் உழைக்காமல் அலுவல் நேரத்துக்கும் அப்பால் பார்ட் டைம், சைடு பிசினஸ் என்று பல வழிகளில் உழைத்து வருமானத்தைப் பெருக்கி சேமித்து வைக்கிறார்கள். அவ்வாறே மறுமை வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்று விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் கடமையான அமல்களைச் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட உபரியான வணக்கங்களையும் அதிகமாகச் செய்து வரவேண்டும். எனவே தான் அல்லாஹ்வும் (நபிலான) உபரியான வணக்கங்களைச் செய்வதற்கு அதிகம் ஆர்வமூட்டுகிறான்.

                (மரணத்திற்கு முன்னதாக) உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முற்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ, அதனை அல்லாஹ்விடம் மறுமையில் பெற்றுக் கொள்வீர்கள். (2:110)

உபரியான வணக்கங்களை நபில் தானே என்று அலட்சியப்படுத்தி விடக்கூடாது. ஏனெனில் சிறிய அமலாக இருப்பினும் அது வீண்போகாது என்பது குர்ஆனின் கூற்றாகும்.

எவர் ஒரு அணுவளவு நன்மை செய்தாலும் அவர் (அங்கு) அதனைக் காண்பார். (99:7) மற்றொரு இடத்தில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். எவர் முஃமினாக இருக்கும் நிலையில் நற்செயல்கள், செய்கின்றாரோ அவரின் முயற்சி (எவ்விதத்திலும்) நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம். (21:94)

உபரியான வணக்கங்களின் மூலமாக இறைவனின் நெருக்கம் அதிகரிக்கும். அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறுகிறார்கள். எவர் ஒரு நன்மையான செயலைக் கொண்டு வருவாரோ அவருக்கு அது போன்று பத்து நன்மைகள் வழங்கப்படும். எவர்ஒரு தீமையைச் செய்வாரோ, அவருக்கு அதுபோல் ஒரு தீமை தான் வழங்கப்படும். நான் (நாடினால்) மன்னிக்கவும் செய்வேன். எவர் என்னிடம் ஒரு ஜான் அளவு நெருங்குவாரோ, அவரிடம் நான் ஒரு முழம் அளவு நெருங்குவேன். எவர் என்னிடம் நடந்து வருவாரோ, அவரிடம் நான் ஓடோடி வருவேன். எவர் நிறைய பாவங்கள் செய்து இருந்தாலும் எனக்கு இணை வைக்காத நிலையில் என்னைச் சந்திப்பாரோ, அவருக்கு அந்தப் பாவங்களைப் போன்ற அளவு மன்னிப்பை வழங்குவேன். (முஸ்லிம்)

உபரியான வணக்கங்கள் செய்வதால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறை திருப்தியும், நெருக்கமும் ஏற்படுவதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நெருக்கமும் மறுமையில் கிடைக்கிறது.

ரபீஆ பின் கஅப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் உளுச் செய்யும் தண்ணீரையும் மற்ற பொருட்களையும் கொண்டு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஏதாவது கேளும் என்றார்கள். உடன் நான் சொர்க்கத்தில் உங்களோடு இருப்பதைக் கேட்கிறேன் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது அல்லாத வேறு ஏதேனுமுண்டா? எனக் கேட்க, நான் இல்லை, அதைத்தான் கேட்கிறேன் என்று கூறியவுடன் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். அப்படியானால் நீர் அதிகமாக ஸஜ்தா செய்வதைக் கடைப்பிடித்து அதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள். (முஸ்லிம்)

கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது அதில் பல குறைபாடுகள் நமக்குத் தெரியாமலே நிகழ்ந்திருக்கும். அவைகளை நாம் செய்யும் உபரியான வணக்கங்களின் மூலமாக நிவர்த்தி செய்யப்படும்.

ஆபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மறுமை நாளில் ஒரு அடியான், விசாரிக்கப்படக் கூடியவற்றில் முதலாவது அவனுடைய தொழுகையைப் பற்றித்தான். அதில் அவன் பூர்த்தியாகி உண்மையான பதிலைச் சொல்லிவிட்டால் அதில் அவன் வெற்றி பெற்றவனாக ஆகி விடுவான். அதில் அவன் தோல்வி அடைந்துவிட்டால் அவன் நஷ்டவாளியாகி விடுவான். ஏனெனில் அவனுடைய கடமைகள் ஏதேனும் குறைபட்டிருந்தால், அவனுடைய உபரியான வணக்கங்களை கவனியுங்கள் என்று இறைவன் கூறுவான், அவனுடைய கடமைகளில் எது குறைவாக இருக்கிறதோ, அதை உபரியான வணக்கங்களைக் கொண்டு பூர்த்தி செய்யப்படும். பிறகு இவ்வாறே எல்லாச் செயல்களும் கவனிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வித்ர், தஹஜ்ஜத் தவிர மேலும் பல நபிலான வணக்கங்கள் நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டு அவற்றுக்குரிய சிறப்புகளும் கூறப்பட்டிருக்கின்றன.

ளுஹா தொழுகை : அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். விடிந்ததும் உங்களில் ஒவ்வொருவருடைய (கை, கால்) மூட்டுக்களுக்காக தர்மம் செய்வது கடமையாகும். எனவே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஒவ்வொரு சொல்லும் தர்மமாகும். நுல்லதை ஏவி தீயதைத் தடுப்பதும் தர்மமாகும். எனினும் இவை, அனைத்திற்கும் இரண்டு ரகஅத் தொழுகை போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாம் செய்யக்கூடிய எல்லா நல் அமல்களும் மறுமையில் தராசின் தட்டை வலுப்படுத்தும என்பதில் சந்தேகமில்லை. எனினும் சில நல்ல அமல்களை (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லி காட்டியுள்ளார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மறுமையில் எனது உம்மத்தில் ஒருவர் எல்லா மக்களுக்கும் மத்தியில் கொண்டு வரப்படுவார். அவருடன் அவருடைய 99 செயல் ஏடுகள் கொண்டு வரப்படும். அவருடைய பார்வையின் தூரம் அளவிற்கு அவருடைய ஒவ்வொரு ஏடுகளும் இருக்கும். அம்மனிதரை நோக்கி இந்த ஏடுகளில் எழுதப்பட்டவை அனைத்தும் உண்மை தானா? இதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? எழுதக் கூடிய மலக்குகள் உனக்கு ஏதேனும் அநீதம் செய்துள்ளார்களா? என்று கேட்கப்படும், அதற்கு அம்மனிதர் இறைவா ஏட்டில் எழுதப்பட்ட அனைத்தும் உண்மை தான் என்று ஒப்புக் கொண்டுவிட்டு, மனதினுள் எனது வெற்றிக்கு வழியே இல்லை என்று எண்ணிக் கொண்டிருப்பான். அந்நேரத்தில் அல்லாஹுத்தஆலா இன்று யாருக்கும் அநீதம் இழைக்கப்பட மாட்டாது. உனது பாவத்தின் ஏடுகளுக்கு மத்தியில் உன்னுடைய ஒரு நன்மையின் சீட்டும் இருக்கிறது. அதில் நீ கூறிய "அஷ்ஹது அன் லாயிலாஹா இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு" என்பதும் எழுதப்பட்டு இருந்தது அதற்கு அம்மனிதர் இறைவா, எனது இவ்வளவு அதிகமான பாவங்களுக்கு எதிரில் இந்த சின்ன வார்த்தை என்ன எடை தந்து விடும் என்ற கேட்பான். அந்த நேரத்தில் அவனிடம் உனக்கு அநீதி இழைகப்பட கூடாது என்பதற்காக அதையும் நிறுத்தப்படும் என்று கூறிப்பட்டு அவனது பாவ ஏடுகளை ஒரு தட்டில் இந்த சீட்டை ஒரு தட்டிலும் வைக்கப்படும் அப்பொழுது கலிமா வைக்கப்பட்ட தட்டு கணத்தால் தாழ்ந்து விடும். இதைக் கூறிய பின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் திருநாமத்தை விட உயர்வானது எப்பொருளுமே இல்லை (திர்மிதி)

ஹஜ்ரத் அலி (ரழி) கூறினார்கள் உலகம் நாளுக்கு நாள் உங்களை விட்டு முகந்திருப்பி தூரமாகிக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுமையோ அனுதினமும் நெருங்கி வந்துக் கொண்டே இருக்கிறது. உலகம் மறுமை ஆகியவற்றில் ஒவ்வொன்றிற்காகவும் சில மக்கள் இருக்கிறார்கள் எனவே நீங்கள் உலகத்திற்கான மக்களாக ஆகாதீர்கள். மறுமைக்கான மக்களாக மாறி விடுங்கள். இன்று அமலுக்குரிய நாளாகும். கேள்வி கணக்கு இல்லை. நாளை கேள்வி கணக்கின் நாளாகும் அமல் இல்லை (மிஷ்காத்)

மனிதன் தனது உலக பொருளிலிருந்து தனது மறுமைக்குரிய பங்கை மறந்து விடுவது என்பது தானே தன்மீது இழைத்துக் கொள்ளும் மாபெரும் அநியாயமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கியாமத் நாளன்று மனிதனை எந்நிலையிலே அல்லாஹ்வின் சமூகத்தில் கொண்டு வரப்படும் என்றால் (பலஹீனம், அவமானத்தின் அடிப்படையில்) அவன் ஒரு ஆட்டுக்குட்டியைப் போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நிறுத்தப்படுவான் அப்பொழுது அவனிடம் "நான் உனக்கு சொத்து செல்வங்களை கொடுத்திருந்தேன் உன்மீது பேருபகாரங்களை புரிந்திருந்தேன். அந்த அருட்கொடைகளில் எவ்வாறு செயல்பட்டாய்? என விசாரணை செய்யப்படும் அதற்கு அவன் யா அல்லாஹ்! நான் செல்வத்தை சேகரித்தேன், பன் மடங்கு பெருக்கினேன், உலகில் விட்டு வந்தவிட்டேன். திரும்பி அனுப்பி வைத்தால் அனைத்தையும் என்னுடன் எடுத்து வந்துவிடுவேன். நீ மறுமையின் சேமிப்பாக முற்கூட்டி என்ன அனுப்பி வைத்தாய்? அவன் திரும்பவும் முன் கூறியவாரே சேமித்தேன், பன்மடங்காக்கி விட்டு வந்துவிட்டேன், திரும்ப அனுப்பினால் எடுத்து வருவேன். குடைசியாக அவனிடம் மறுமைக்குரிய சேமிப்பாக முற்கூட்டி அனுப்பியது ஒன்றும் இல்லாததைக் கண்டு அவன் நரகில் தூக்கி வீசப்படுவான். (மிஷ்காத்)

சங்கையானவர்களே! அதிகப்படியான உபரியான அமல்கள் நாம் வெற்றி பெறுவதற்கு காரணம் என்றாலும் எதார்த்தமாக கருதும் சிறிய செயல்களும் பெரும் வெற்றியைத் தரும் என்பதும் உண்மை.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "கணவன் இல்லாத பெண்கள், ஏழை மிஸ்கீன்களின் தேவை ஆகிவற்றிற்கு முயற்சி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் முயற்சி செய்பவரைப் போன்றவர் என அருளியுள்ளார்கள் (மிஷ்காத்)

இதைப் பற்றி சிந்திப்பதே நாம் கிடையாது.

நபிகள் பெருமானார் (ஸல்) சுவர்க்கத்தில் உயர்ந்த உப்பரிகைகள் (கண்ணாடி மாளிகைப் போன்ற தோற்றமுடையவன்) இருக்கின்றன. அவைகளில் உள்ளே இருக்கும் சகல பொருட்களும் வெளியிலிருந்து தெரியவரும். உள்ளே இருந்து பார்க்க, வெளியில் இருக்கும் சகல பொருட்களும் தெரிய வரும் என கூறியபோது யா ரசூலுல்லாஹ்! ஆவை யாருக்காக உள்ளவை? ஏன வினவினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் "எவர்கள் (முகங்கோணாமல் கடுகடுக்காமல்) இனிமையுடன் பேசுவார்களோ, ஜனங்களுக்கு உணவளிப்பார்களோ எப்பொழுதும் நோன்பு நோற்பார்களோ, மக்கள் உறங்கும் சமயத்தில் இரவில் தொழுவார்களோ அவர்களுக்குரியது என பதிலளித்தார்கள் (திர்மிதி)

கண்ணாடி மாளிகையை பெற ஆசிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மிஷ்காத்தில் ஓர் ஹதீஸ் பதிவாகியுள்ளது : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு கெட்ட நடத்தையுள்ள பெண் (விபச்சாரி) தனது ஒரு செய்கையின் காரணமாக மன்னிக்கப்பட்டாள். அவள் சென்றுக் கொண்டிருக்கும் போது ஒரு கிணற்றுக்கு அருகில் நாய் ஒன்று நிற்கக் கண்டாள். தாகம் தாங்காமல் அதன் நாக்கு தொங்கிக் கொண்டிருக்க அது சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்த அப்பெண் தனது காலுரையைக் கழற்றி தன் முந்தானையில் கட்டி கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்த நாய்க்கு நீர் புகட்டினாள். (இதனால் மன்னிக்கப்பட்டாள்). ஒருவர் யா ரசூலுல்லாஹ் "மிருகங்களை பராமரித்தாலும் நன்மை கிடைக்குமா? ஒவ்வொரு இதயத்துடிப்புள்ள ஜீவனுக்கும் உபகாரத்தை செய்வதில் நன்மையுண்டு என பதிலளித்தார்கள் (மிஷ்காத்)

உயிருள்ள, சிறந்த படைப்பான மனிதப் படைப்பு இன்று தண்ணீர் தேவை என அல்லாடிக் கொண்டு இருக்க பக்கத்து வீட்டாருக்கு கூட கொடுப்பதில்லை ..

முஸ்லிம் ரிவாயத்தில் அல்லாஹ் ஒருவரிடம் நீ உலகில் செய்த நல்ல காரியம் உண்டா?  அல்லாஹ்வே நான் கடன் கொடுப்பேன், அப்படி திரும்ப வாங்கும் நேரத்தில் ஏதேனும் கஷ்டம் அவர்களை (கடன் வாங்கியவர்களை) பிடித்து கொள்வதால் கொடுக்க முடியாவிட்டால் பணக்காரர்களுக்கு நான் கால தவணை கொடுப்பேன், ஏழைகளாக இருந்தால் மன்னிப்பேன் என கூற அல்லாஹ் அவனை சுவனத்திற்கு அனுப்புகிறான். (முஸ்லிம்)

இன்று கடன் கொடுத்தவர் வாங்கியவர்களின் நிலையை பார்த்தால் சில நபர்கள் அடித்தும் கேட்கிறார்கள்.

வாடகை ஏதோ ஓர் காரணத்தால் ஒரு நாள் தாமதமானால், குடியிருப்பவர்களின் குடித்தனம் நடு ரோட்டில் வருவதை பார்க்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் நரகவாசி  என முடிவான பின்பு அல்லாஹ் அவனை சுவனவாசிகளின் வரிசையில் போய் ஏதேனும் நன்மை அவர்களுக்க செய்துள்ளாயா? என கேட்டுவா என அனுப்புவான் அவர் சுவனவாசிகளை கடந்து செல்வார், ஒருவர் என்னை அடையாளம் தெரிகிறதா? நீ ஒருமுறை தண்ணீர் பஞ்ச காலத்தில், தண்ணீரை விற்றுக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு தண்ணீர் கொடுத்தாய் அல்லாஹ்விடம் கூறுவான் இவனை இந்த காரியத்திற்காக சுவனம் அனுப்பினான். (மிஷ்காத்)
1.             அல்லாஹ் எவ்வளவு பெரிய அருளாளன்
2.             இந்த சிறிய அமல்களும் பெறும் வெற்றி தரும்.

ஹஜ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள் யா ரஸுலுல்லாஹ் என்னிடம் ஓர் பெண்மணி உதவி கேட்டாள் என்னிடம் இருந்த ஓர் பேரித்தம் பழத்தை கொடுத்தேன் அவள் அதை இரண்டாக ஆக்கி தன் குழந்தைக்கு கொடுத்தாள். பிறகு மீண்டும் ஓர் பகுதியை என்னிடம் கொடுத்துவிட்டாள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "இந்த செயல் நரகத்திற்கு இரையாகிவிட்டது சுவனம் இவருக்கு கடமையாகிவிட்டது" (புகாரி).

சங்கையானவர்களே சற்று யோசிக்க வேண்டும் தன் குழந்தைக்கு பாசத்துடன் பரிவுடன் நடந்த ஓர் செயல் சுவனத்தை பெற்றுத் தருகிறது என்றால், மற்ற விஷயங்கள். கணவனின் பணிவிடை, குழந்தைகளின் சேவை, கணவனின் குடும்பத்திற்கான அழைப்பு இவைகளின் நன்மைகளை என்ன சொல்வது.

பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் தன்னிடம் கொடுப்பதற்கு பொருள் இல்லாததை நினைத்து, இந்த மணல் குவியல் அனைத்தும் தங்கமாக இருந்தால் நான் அல்லாஹ்வின் பாதையில் கொடுப்பேனே என நினைத்தார். அந்த நபருக்கு அல்லாஹ் செய்தி அறிவித்தான் நாம் அவருக்கு அதற்கு உண்டான நன்மையை கொடுத்துவிட்டோம் என தெரியப்படுத்துங்கள்.

இதுபோல ஏராளமான விஷயங்களை நாம் பார்க்க முடிகிறது, சிறிய, சிறிய காரியத்தை அற்பமாக கருதாமல் செய்தோமே யானால் வெற்றி பெற முடியும்.

அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் வெற்றி பெற்றவர்களாக ஆக்குவானாக. ஆமீன்.