Wednesday 1 May 2013

வியாபாரம் - வணக்கமே! -1



வியாபாரம் - வணக்கமே! -1


هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ (15)


عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ»


                மனிதர்களை படைத்த பேராற்றல் கொண்ட இறைவன் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தும் விதமாக மனித வாழ்வியலில் உள்ள சில அத்தியாவசியமான தேவைகளை அவனே தாராளமாக மனிதனின் எந்த முயற்சியும் இல்லாமல் செயல்படும் விதமாக வைத்துவிட்டான்.

                ஊதாரணமாக : மனிதன் வாழ காற்று அவசியமானது அதை அளவில்லாமல் மனிதன் பார்க்க முடியாத வகையில் வீச செய்கிறான். நீரை நிறைவாகவே கொடுத்துள்ளான். இதுபோல எண்ணற்றவைகள்.. இது ஒரு பகுதி என்றால் மற்றொரு விதத்தில் வாழ்வியலுக்கு சில முயற்சிகளையும் காரணமாக்கிவிட்டான். அதிலுள்ள ஒன்று தான் சம்பாத்யம். சம்பாத்யம் என்பதிலும் எப்படியும் பொருளீட்டிக் கொள்ளலாம் என்பது அல்லாமல், அதிலும் வரைமுறையை வகுத்துள்ளான்.

1.             இவ்வகையில் பொருள் ஈட்டுவது எல்லாம் கூடாது, இவைகளை ஹராம் (தடை செய்யப்பட்டது)

2.             இவ்வகையில் பொருள் கூடும் இவைகள் ஹலால் (ஆகுமாக்கப்பட்டது)

இந்த இரண்டாம் வகையான ஆகுமாக்கப்பட்டதிலும் பல விதங்களில் சம்பாத்யம் இருப்பினும் வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்டுவது தனி சிறப்பு மிக்கதாகும்.

                பெருமானார் (ஸல்லல்லாஹு) அவர்களை நாற்பதாம் வயதில் தான் ரசூல் ஆக உலகிற்கு அடையாளம் காட்டினான். ஆனால் அதற்கு முன் நல்ல வியாபாரியாக இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.

                நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல. நுபிமார்களில் அனேகமானவர்கள் வியாபாரியாகவே இருந்துள்ளார்கள்.
                ஹழ்ரத் தாவூத் (அலை) அவர்களை வியாபாரி என்று அல்லாஹ் அறிவிப்பு செய்கிறான்.

                அல்லாஹ் கூறுகிறான் (67:15)

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ (15)
பூமியை அவன் வசப்படுத்திக் கொடுத்தான் நான்கு புறங்களிலும் வருவாயை தேடி புறப்படுங்கள்,ஹலாலான உணவில் இருந்து சாப்பிடுங்கள்.

                பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நல்ல வியாபாரம் என்பதும் சிறந்த வணக்கமாகும்
                நல்ல வியாபாரத்திற்கு எந்த இடத்திலும் மார்க்கம் தடை செய்வது கிடையாது. அன்றைக்கு ஹஜ் பயணத்திற்கு புறப்படுவார்கள் 6-7 மாதங்கள் வரை வியாபாரத்தை நிறுத்தி விட்டு புனித ஹஜ் பயணத்திற்கு போனவர்களை (2:198)

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ

                ஹஜ்ஜுக்கு போனாலும் வியாபாரம் செய்வது, அல்லாஹ்வின் ரிஜ்க்கை தேடுவது உங்களின் மீது குற்றம் கிடையாது.

                சுருங்கச் சொன்னால் நல்ல வியாபாரம் அது எங்கு இருப்பினும் கூடும். காரணம் அதுவும் சிறந்த வணக்கமாகும். மற்றொரு இடத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

                (நபியே)! தொழுகையை இலேசுபடுத்துங்கள்.. வியாபாரம் செய்யும் நல்ல வியாபாரிகளும்,அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் வீரர்களும் உங்களுக்குப்பின் இருக்கிறார்கள்.

                நல்ல வியாபாரத்தை ஜியாதிற்கு அடுத்த கட்டமாக சொல்ல முடியும். அதனால் தான் ஹஜ்ரத் உமர் (ரழி) இப்படி துஆ செய்வார்கள். யா அல்லாஹ்! என்னை அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறக்கும் பாக்கியத்தைக் கொடு! என்னுடைய நபி வாழ்ந்த மண்ணிலேயே நல்ல அடக்கம் செய்கின்ற வாய்ப்பை ஏற்படுத்துவாயாக!

                ஒரு கால் மரண இடம் வேறாக இருந்தால் என் குடும்பத்திற்காக கொடுக்கல் வாங்கல் செய்யும் கடைவீதியில் எனக்கு மரணத்தை கொடுப்பாயாக!
                ஆதே வேளையில் சிறப்பு மிக்க விபாயாரம் இஸ்லாமிய வழிகாட்டல் அடிப்படையில் இருக்க வேண்டும். இஸ்லாம் காட்டிய வழிமுறையில் வியாபாரம் செய்தவரை இஸ்லாமியர்களையும் அவர்களின் வியாபாரத்தையும், வணிக தொடர்பு கொள்வதையும் உலகம் பிரியப்பட்டது என்பதைவிட அந்த உறவை பெருமையாக கருதியது என்பது சரித்திர வரலாறு.

                ஆனால் இன்று முஸ்லிம் வியாபாரிகள் என்றால் எட்டி நின்று பார்க்கிறார்கள். கொடுக்கல் - வாங்கல் செய்யப் பயப்படுகிறார்கள். வாக்களித்தால் மாறு செய்கிறார்கள். நம்பினால் மோசடி செய்கிறார்கள். பேசுகின்ற பிரகாரம் நம்பிக்கையுடன் நடப்பதில்லை சில்லரை வியாபாரம் முதல் பெரும் வர்த்தக நிறுவனங்கள் வரை ஏமாற்று வியாபாரம் தான்! நாணயம் மறைந்து மோசடி நிறைந்து காணப்படுகின்றது என்ற ஆதங்கம் பரவலாக காணப்படுகிறது.

இஸ்லாமிய பார்வையில் வியாபார வழிமுறைகள்:

                ஒரு முஸ்லிம் எந்த காரணத்தை கொண்டும் ஹராமான வியாபாரம் செய்ய வேண்டாம்.

                முதல் விஷயம் நாம் தேர்ந்தெடுக்கும் வியாபாரம் ஹலாலானதாக இருக்க வேண்டும் கோடிகள் பல சேர்ப்பதற்கு மார்க்கம் மறுக்கவில்லை சில்லரைகள் சில இருந்தாலும் ஹலாலாக இருக்க வேண்டும் என்பதே மார்க்க வழியுறுத்தல்.
               
                அப்துல்லாஹ் இப்னு உமரிடம் ஓர் விளக்கம் கேட்கப்பட்டது,நான் தொழுகிறேன் எத்தனை ரகஆத்துகள் என்பதில் சந்தேகம் வருகிறது ஓர்மை கிடைப்பதில்லை என்ற போது கூறினார்கள்:

                இரண்டு விஷயம் இருப்பின் ஓர்மை கிடைக்காது
1.             உன் சாப்பாட்டில் ஏதேனும் ஹராம் கலந்திருக்கும்
2.             உன் ஆடையில் ஏதேனும் நஜீஸ் பட்டிருக்கும்
                ஹராம் வணக்கங்களை பிழிந்து சக்கையாக அல்லாஹ் எரிந்துவிடுவான்.
                நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
                ஹலால் - ஹராம் என சட்டை செய்யாத ஓர் காலம் வரும்.
                கண்கூடாக பார்க்கிறோம் ஹராமை யாரும் இறைவனின் கோபத்தை ஏற்படுத்தும், அவனின் அருளை விட்டும் தூரப்படுத்தும் என்ற எந்த நினைவும் இல்லாது ஹராமில் மூழ்கி நீந்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

பொய் சத்தியம் செய்தல் :
قَالَ ابْنُ المُسَيِّبِ: إِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ، مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ»
                ஒரு வாடிக்கையாளர் விலை கேட்டும் அதே நேரத்தில் எந்த தயக்கமும் இல்லாது,தேவையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக சத்தியமா சொல்றேன் எனக்கு கட்டுப்படியாகாது,சத்தியமா இவ்வளவு விலைக்கு தான் வாங்கினேன்,என்பன போன்ற பழக்கங்களை பார்க்க முடிகிறது.

عَنْ أَبِي ذَرٍّ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» ، قُلْنَا: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ، فَقَدْ خَابُوا وَخَسِرُوا؟ فَقَالَ: «المَنَّانُ، وَالمُسْبِلُ إِزَارَهُ، وَالمُنَفِّقُ سِلْعَتَهُ بِالحَلِفِ الكَاذِبِ»
                அல்லாஹ்வின் கோபத்திற்குரிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்கமாட்டான் அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு கடுமையான தண்டணையுமுண்டு என்று கூறினார்கள்.
நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? எனக் கேட்ட போது

1.             செய்த உதவிகளை சொல்லிக்காட்டுபவன்
2.             தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன்
3.             தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் (நூல் - முஸ்லிம்)

பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி நம்ப வைத்து தரமிழந்த பொருள்களை விற்பவர்கள் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள், கடுமையான தண்டணையை அனுபவிப்பார்கள்.

அளவில் ஏற்ற – தாழ்வு ;

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3)

                திருக்குர்ஆனில் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி அவர்கள் முழுமையாக அழிக்கப்பட்டார்கள் என பல நிகழ்வுகளை கூறும் இறைவன் அவர்களின் காரணம் கூறவில்லை.

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ      
ஆனால் ஒரு கூட்டத்தினரைப் பற்றி கூறுகையில்    (அளவையிலும், எடையிலும் மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக.

الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ

                அவர்கள் எத்தகையோர் என்றால், (தங்களுக்காக) மனிதர் களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவான (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர்.

وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ

                (ஆனால்) தாங்கள் அவர்களுக்கு (மற்ற மனிதர்களுக்கு) அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் (குறைத்து) மோசடி செய்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர்.

No comments:

Post a Comment