Friday 31 May 2013

விழிப்புணர்வு உள்ள கல்வி தேவை



விழிப்புணர்வு உள்ள கல்வி தேவை


قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
  
فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ


கல்வி அவசியம் :

          மனிதன் உயர்ந்தவனாக , சமூகத்தில்  இழிவான  தாழ்ந்தவனாக  கருதபடுவது அவனிடம் இருக்கும் அறிவின் மூலம் தான் , ஒருவன் மலக்கை விட  உயர்ந்தவனாக (கண்ணியமானவனாக ) அல்லது  மிருகத்தை விட தாழ்ந்தவனாக ஆகுவது  ஒருவனின்  அறிவின் மூலம் தான் , முறையாக  அறிவை வளர்த்தால் மலக்காகிறான்  முறைகேடாக  விட்டால் மிருகமாகிறான் . எனவே  தான் மார்க்கம் அறிவு வளர்ச்சிக்கு காரணமாக  உள்ள எல்லா கல்வியைக் கற்பதற்கும்  ஆர்வமூட்டுகிறது படிப்பும் , எழுத்தும் கல்விக்கு அஸ்திவாரமாக இருப்பதால் முதல் வசனமாக இறைவன் அதைப் பற்றி இறக்கிவைத்தான் .

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ - خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ - اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ-الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ - عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ(96:1,2,3,4)


    கல்வி மனிதனுக்கு அவசியமான  ஒன்றாக  இருப்பதினால்  நபி (ஸல் ) அவர்கள் அதற்காக அனுப்பபட்டார்கள்.

فَقَالَ إِنَّمَا بَعَثْتُ مُعَلِّمًا
நான் கற்றுக் கொடுப்பவனாக அனுப்பப்பட்டுள்ளேன் (தாரமி )எனவே  கல்வியை  கற்பவர்களாக இருப்பது அவசியமாகும் .

   குரானிலும் ஹதீஸ்களிலும்  கல்வி கற்பதை  வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»
    ஹஜரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் கல்வியை தேடுவதற்காக  வெளிக்கிளம்பி சென்றவர்  திரும்பி வரும் வரை அல்லாஹ்வின்  பாதையில் இருக்கிறார் (திர்மிதி ).

    குர் அனிலும் , ஹதிஸிலும் மார்க்க கல்வியை வலியுறுத்தி சிறப்புப்படுத்தி வந்திருந்தாலும் ,
உலக கல்வியை வெறுக்குமாறு அது தடை விதிக்கவில்லை  மாறாக அவற்றை கற்றுக் கொள்வதிலும் ஆர்வமூட்டுகிறது
 إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
 (2:164) எனற வசனத்தின் கடைசியில்

    சிந்திக்கும்  சமுகத்திற்கு இதில் அத்தாட்சிகள் என்று அல்லாஹ் முடிக்கிறான். அப்படியான சிந்திப்பதை தூண்டுவது இஸ்லாமிய வேதமாகிய குர்ஆனில் மட்டுமே. அறிவு, கல்வி , ஆராய்ச்சி , சிந்திப்பது இது சம்மந்தமாக குர்ஆனில் மொத்தம் 580 இடங்களில் கூறப்பட்டுள்ளது மனித சமுகத்திற்கு பயன் தரும் எந்த கல்வியும்  இஸ்லாத்தில் தடையில்லை. பத்ருப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்ட வர்களை முஸ்லிம் களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கச் சொல்லி விடுதலை செய்தார்கள் .
ஜைத் பின் ஸாபித் (ரலி)அவர்களை யூத மொழியான சுர்யானி பாஷையை கற்குமாறு நபி?(ஸல் )அவர்கள் கட்டளையிட்டார்கள் அதை 17 நாட்களில் கற்றார்கள்.

    இப்படி ஏராளமான விஷயங்களை இஸ்லாம் கல்விக்கு கொடுக்கும் முக்கியம் பற்றி குறிப்பிடலாம்.

திட்டமான கல்வி 

           எந்த கல்விக்கும் இஸ்லாம் எதிரானதல்ல என்று நாம் சிந்தித்தால் விளங்கிகொள்ளலாம் . நம் முன்னோர்கள் விளங்கியிருந்தால் எல்லா துறைகளிலும் முதன்மை பெற்றார்கள் வரலாற்றை புரட்டிபார்தால் நம் இஸ்லாமிய பெரியார்கள் கால்பதிக்காத துறை என்று  ஒன்றும் இல்லை இன்னும் கூறினால் இஸ்லாமியர்கள் தான் உலகில் இன்றலாவிய கல்வி துறைகளின் முன்னோடிகள் என்பதுதான் உண்மையாகும் .

    கல்வி கற்பது திட்டமானதாக இருக்க வேண்டும் நபி (ஸல்) யூதர்களின்  மொழியான சுர்யாணியை ஜைதுப்னு  ஸாபிதிடம் சொன்னார்கள் காரணம் அவர்களிடம் திறமையும், நினைவாற்றலும் ,அதற்கு மேல்  ஆர்வமும் இருந்தது.

    இன்னும் சொன்னாள்  சுர்யாணி மொழியுடன், அந்த நபர்களுடன் தொடர்பு இருந்தது . பெருமானார் (ஸல்) அவர்களின் அதி நுட்பமான ஞானம் சரியாக அவர்களை  தேர்ந்தெடுத்தார்கள், அவர்களும் அந்த சஹாபியும் 17 நாட்களில் அதை முழுமையாக  கற்றார்கள் வேதமான தவ்ராத்தையும் முறையாக  யூதர்கள்  செய்த மாற்றங்களை -திருட்டுத்தனத்தை  நபி(ஸல்) அவர்களுக்கு  தெரியபடுதினார்கள் அதை கொண்டு சமுகம்  பயன்பெற்றது.

சந்கையானவர்களே!
இஸ்லாமிய சமுகத்திற்கு வருவோம்.!                                                                  

1 கல்வியை திட்டமிடுகிறோமா ?

     என்ன துறை என் தந்தைக்கு தெரியாது என் மகன் கல்லூரிக்கு போகிறான்  லட்ச ரூபாய் கொடுத்து சேர்த்துள்ளேன் அதை தவிர ஒன்றும் தெரியாது எந்த திட்டமும் இல்லாமல் சும்மா எதாவது ஒரு பட்டம் வாங்க வேண்டும் .

      என மட்டும் 90 சதவிதம்இஸ்லாமிய  பட்டதாரிகள் உள்ளார்கள். செல்வந்தர்கள் , பெரும் தொழிலதிபர்கள் பிள்ளைகள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்லுரி படிப்பு என்பது எந்த திட்டமும் இல்லாமல் பெயருக்கு பின்னால் எதாவது ஒரு பட்டம் போட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காசு பணத்தை கொட்டி கல்லுரி அனுப்பும் நிலை, படிப்பை கொண்டு சம்பாதிக்கவேண்டும் என்ற நிலை இல்லாத காரணத்தால் கல்வியில் எந்த திட்டமும் இல்லை. இப்படி பட்டவர்கள்தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் வழிதவறி போகும் விஷயத்தில் நேரத்தை பயன் படுத்தும்போது ,அவர்கள் மட்டும் அல்ல,. உடன் இருப்பவர்களும் அதனை பார்பவர்களும் வலி கேட்டு குட்டிச்சுவராகி போவதை பார்க்கிறோம்.

     இவர்களின் திட்டமில்லாத கல்வி அவர்களுக்கும் பயன் இல்லை , சமுகத்திற்கும் [பயனில்லை , மாறாக வழிதவறி விடுகிறபோது அவர்கள் குடும்பத்தார்கள் இஸ்லாமிய மார்க்கம், சமுகம் என எல்லாவற்றுக்கும் இழி சொல் ஏற்படுகிறது .


2 தேர்ந்தெடுக்கும் துறையில் ஆற்றல் உள்ளதா?
இஸ்லாமியர்கள் கல்வியை தேர்ந்து எடுப்பது என்பது நோக்கமே இல்லாமல்  சும்மா படிக்க வைக்க தான் என்பது துறையில் ஆற்றலே இல்லாத ஒரு நபரை நிர்பந்தப்படுத்துவது. 10ம் வகுப்பில் 200 மார்க் எடுத்தவனுக்கு 480 மார்க்கு எடுத்தவனின் குரூப்பை காசு கொடுத்து வாங்கி கொடுப்பது படிப்பான அவன் படிப்பவனையும் கெடுப்பான். இதே போல தான் காலேஜ் துறைகளும், உதாரணமாக +2 வில் ஐந்தாம் பிரிவு எடுத்த ஒருவன் அதில் தையல், சிறிய சிறிய கணக்கு, சமையல் இது மாதிரி பாடம் படித்தவனை கொண்டு போய் பணத்தை பயன்படுத்தி  இன்ஜினியரிங் சீட்டு வாங்கிக் கொடுத்தால் உருப்படுமா சமூகம், இவன் எப்படி படிப்பான்? அங்கு நடத்தப்படும் பாடம் எல்லாம் விளங்குமா? என்ன பலன்? இஸ்லாமிய பெண் பிள்ளைகள் இன்ஜினியரிங் படித்து என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் படித்து  படித்த வேலைக்கு போனவர்களை கணக்கெடுங்கள் 1 சதவிகிதம் வருவதும் கஷ்டம்.
                படிப்பு இவனுக்கு என்ன லாபம்? இவன் நிலைக்கு சக்தியுள்ளதா? குடும்ப சூழ்நிலைக்கு ஒத்துவருமா? சமூகத்துக்கு இந்த கல்வியை கொண்டு என்ன பலன்? என எந்த திட்டமும் இல்லாத கல்வி பயிலும் நிலை மாற வேண்டும். திட்டமான கல்வி வேண்டும் அதற்கு பட்டதாரியின் வழிகாட்டல், ஆலோசனையின்படி செல்ல வேண்டும். அல்லாஹுதஆலா திருமறையில் குறிப்பிடுகிறான்     (நபியே) நீர் அவர்களுடன் (ஸஹாபாக்களுடன்) கலந்தாலோசிப்பீராக (3:159)
                நபிக்கு அல்லாஹ் ஆலோசனை செய்யும்படி கூறியுள்ளான் எனில் நம்முடைய நிலையை பற்றி என்ன சொல்வது. நம்முடைய காரியங்களில் நாம் ஆலோசனை செய்வது மார்க்க வழிகாட்டலாகும்.
ஒழுக்கம் சார்ந்த கல்வி!
மனிதனை, மனிதனாக்குவது தான் கல்வி, மனிதனை பரிமான மாற்றம் ஏற்படுத்துவது தான் கல்வி, -யாரிடம் ஒழுக்கம் இல்லையோ அவரிடம் இல்ம் இல்லை.
                ஒழுக்கத்தை கற்றுத் தருவது தான் கல்வியாகும். ஒழுக்க கேட்டை கற்றுக் கொடுப்பது கல்வியே இல்லை. இன்றைய சூழலை பார்த்தால் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களிடம் இல்லாத ஒன்று என்றால் ஒழுக்கம் தான். கல்வி அவசியம் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அதே நேரம் ஒழுக்கம் தேவையில்லை என யார் சொல்வார்கள்? ஒழுக்கக் கேடால் எத்தனையோ ஆபத்துகள் ஏற்படுகிறது. மாணவரின் உடல் ரீதியாக, கண்ணிய ரீதியாக, எதிர்கால வாழ்வியல் ரீதியாக, சமூகம், மார்க்க ரீதியாக என ஒருவரின் ஒழுக்க கேடு பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
                ஆபத்துகளை உணராத மனிதன் - மனிதனே இல்லை.


இருபாலர் கல்வி (கோ எஜுகேசன்)

எல்லா சீரழிவுகளும் மிக முக்கியமான காரணம் என்றால் அது இந்த கலப்பு முறை கல்வி தான். இதைப் பற்றிய தெளிவு ஒவ்வொருவரும் அடைவது சமூகத்தின் அவசியமாகும். சங்கையானவர்களே! இதில் மற்றொரு முக்கியமான விஷயம் பெண் பிள்ளைகளை பெற்றோர் மட்டும் கவனம் என்பது தவறான எண்ணம் ஆண் பிள்ளைகளின் பெற்றோர்களும் தெரிய வேண்டியதும், அவர்களும் கவனம் கொள்வது அவசியமாகும்.
1.            இருபாலர் கல்வி முறை என்பது மனித வள மேம்பாட்டை தடை செய்கிறது.
2.            மார்க்கத்தில் இருபாலர் கல்வி முறைக்கு அனுமதி இல்லை.
3.            ஒழுக்க கேடான அத்துனை காரியங்களுக்கும் இந்த வழிமுறைதான் காரணம்.
4.            கல்வியை விட்டு சிந்தனை திரும்புவதற்குண்டான காரணம் என குறைபாடுகளை அடிக்கிக் கொண்டே போகலாம்.
-              கல்வி கற்பது அவசியம் தான், என்பதால் ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக போட முடியாது. ரசம் வைக்கவும் மசாலா வேண்டும். பிரியாணி வைக்கவும் மசாலா வேண்டும். இரண்டையும் தனி. தனியாக வைக்க வேண்டும். பெண் படிக்க வேண்டிய கல்வி தனியானது, நடத்தப்பட வேண்டிய வழிமுறைகளும் தனியாக அமைய வேண்டும். ஆண் அவன் படிக்க வேண்டிய துறைகள் விசாலமானது அவனுக்கு நடத்தப்பட வேண்டிய வழிமுறை கண்டிப்பானது என வேறுபடுத்த முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பின்னால் சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஸஹாபாக்கள் உம்முல் முஃமினீன் (முஃமின்களின் தாய்) ஆயிஷா (ரழி) யிடம் கேட்டார்கள். எப்படி? திரைமறைவுக்குப் பின்னால் இருந்து கேட்டார்கள்.
                இன்றைய சூழலைப் பார்த்தால் பகலில் பள்ளியில் இருவரும் ஒன்றாக பாடம் படித்துவிட்டு இரவில் இருவரும் நெட் என்னும் இணைய தளத்தில் இணைந்தவர்களாக, பத்தாதற்கு டியூஷன் என்ற ஒன்று ஒரு வாய்ப்பு வேறு இருவரும் இணைவதற்கு, தனிமை என்ற தாந்தோன்றி தனம் எதை பயிலுவார்கள்? கல்வியையா? சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதைச் சொல்வது அசிங்கம். அல்லாஹ் குறிப்பிடுகிறான் :  அல்லாஹ் ஓர் எல்லையை வைத்துள்ளான், அதை மீறுகிற போது விளைவு கடுமையாக தான் இருக்கும்.
                கல்வி பயிலுவதின் முறையும் அவசியம்.
                அல்லாஹ் ஆண் - பெண் படைப்பையே ஈர்ப்போடு தான் படைத்துள்ளான். அதனால் படைப்பே இப்படி தான் என விட்டுவிட முடியாது. பாதுகாப்புகளை ஏற்படுத்துவது நம் கடமையாகும்.
                ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்துள்ளார்கள் உடன் ஒருவரும் அமர்ந்துள்ளார் அந்நேரத்தில் ஓர் பெண் வந்து (வாலிப வயதுடையவர்) ஹஜ் செய்ய அனுமதி கேட்கிறார்கள் நபியிடம், உடன் அமர்ந்தவர் திரும்பி பார்க்க நபி (ஸல்) அவர்கள் முகத்தை திருப்பிவிடுகிறார்கள். மீண்டும் அவர் பார்க்கிறார் கைகளை கொண்டு முகத்தை திருப்பி விடுகிறார்கள்.

No comments:

Post a Comment