Thursday 18 April 2013

வெற்றி நிச்சயம்


                                                                 
வெற்றி ,தோல்வி இவை இரண்டும் மனித வாழ்வில் மாறி மாறி வரக்கூடியவை .வெற்றி என்பது நமக்கு மனமகிழ்வையும் தோல்வி என்பது மனகவலையையும் உண்டு பண்ணுகிறது .வேறு விதத்தில் சொல்வதானால் வெற்றி என்பது தன்னம்பிக்கையையும் ,தோல்வி என்பது பயத்தையும் ஏற்படுத்துகிறது .எனவே  நாம் எல்லோரும் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஆசை படுகிறோம் .
மற்றவர்களை தோற்கடிப்பது தான் வெற்றி என்று பலர் எண்ணுகிறார்கள் .இந்த மனோநிலை தவறானது .நாம் நமது சொந்த முயற்சியால் இலக்கை அடைவதற்கு பெயர் தான் வெற்றி. .வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் கைவசத்தில் தான் இருக்கிறது என்று கூறி வெறுமனே அமர்ந்து விட்டால் வெற்றி என்பது நம்மை தாமாகவே வந்தடையாது .

1.வெற்றிக்கு தேவையான தன்மைகள் :
எந்த ஒரு காரியத்திலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் நம் இடத்தில் ஐந்து பண்புகள் அவசியம் இருக்க வேண்டும் .
1.
தன்  மீதான முழு நம்பிக்கை ,தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை .
2.
இலக்கை நிர்ணயித்தல் .அதாவது எதனை முடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்தல் .
3.
நேர மேலாண்மை .நேரங்களை திட்டமிட்டு செயலாற்றுதல் .
4.
சாதிக்க வேண்டுமென்ற விடா முயற்சி .தோய்வில்லாமல் தொடர்ந்து பாடு படுதல் .
5.
வெற்றியை நிர்ணயிக்கும் அல்லாஹ்விடம் அனுதினமும் உதவி தேடுதல் .
இந்த ஐந்து விசயங்கள்  நம்மிடத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை . இதில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டாலும் தோல்வி நம்மை தலுவதயாராக இருக்கும் .                                                
2மறுமையின் வெற்றியே நிரந்தரம் .
ஒரு இறைனம்பிக்கையளானை பொறுத்தவரை இவ்வுலகில் வாழ்வின் வெற்றியை விட மறு உலக வாழ்வின் வெற்றி தான் பெரிதானது .காரணம்  உலகம் அழியக்கூடியது .எனவே அதில் கிடைக்கும் வெற்றியும் அழியக்கூடியது தான்.மறு உலகம் நிரந்தரமானது .எனவே மறுமையில் கிடைக்கும் வெற்றியும் நிரந்தரமானது .எனவே அல்லாஹ்வும் அல்லாவின் இறைத்தூதர் [ஸல்] அவர்களும் எந்த செயலை செய்தால் வெற்றி கிடைக்கும் என நமக்கு அல் குர் ஆன் வாயிலாக தகவல் தந்துள்ளார்களே  அவைகளை நாம் வாழ்கையில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் .
3.இறைவனை பயந்து வாழ்வதன் மூலம் வெற்றி நிச்சயம் .                           
قوله جَلَّ وَعَزَّ: {وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ}                             
எல்லா நிலைகளிலும் தனிமையாக இருந்தாலும் ,மக்களோடு இருந்தாலும் ,இரவாக இருந்தாலும் ,பகலாக இருந்தாலும்  அல்லாஹ்வை அதிகம் பயப்படுவனாக உள்ளேன் .                                                                                                              فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَاللهِ، إِنِّي لَأَتْقَاكُمْ لِلَّهِ، وَأَخْشَاكُمْ لَهُ»                                             
இந்த இறை பயபக்திக்கு தான் தக்வா என்று சொல்லப்படும் .நபி [ஸல்]அவர்கள் பனூ இஸ்ரவேலர்கள் காலத்தில் வாழ்ந்த ஒருவரை பற்றி சொன்ன சம்பவம் புகாரி சரிப்பில் பதிவு செய்யபட்டிருகிறது .அவர் மிக அதிகமாக பாவங்கள் புரிந்தவர் .மரண நேரம் நெருங்கியவுடன் தன் பிள்ளைகளை அழைத்து வஸியத் செய்தார் .நான் மரணம் ஆகிவிட்டால் மற்றவர்கலை மண்ணில் அடக்கம் செய்வது போன்று அடக்கம் செய்ய வேண்டாம் .என்னை எரித்து சாம்பலாக்கி அதன் ஒரு பகுதியை நீரிலும்  மற்றொரு பகுதியை காற்றிலும் கலந்து விடுங்கள் என்று சொன்னார் .அந்த பிள்ளைகளும் தந்தை இறந்தவுடன் அவரை எரித்து சாம்பலாகி நீரிலும் ,காற்றிலும் கலந்து விட்டார்கள் .ஆனால் அல்லாஹ் தன்  வல்லமையினால் அவரை மீண்டும் உருவாக்கி உயிர் கொடுத்து தன முன்னால் கொண்டு வந்து நிறுத்தி கேள்வி கேட்டான் .ஏன் ?.என் இறை தூதரின் வழிமுறைக்கு மாற்றமாக உன்னை எரித்து சாம்பலாக வேண்டும் என்று உன் பிள்ளைகளுக்கு அறிவுறுதினாய் ?அவன் சொல்வான் .யா அல்லாஹ் ! உன்மீதுள்ள பயம் தான் என்னை அப்படி செய்யுமாறு தூண்டியது .எரித்து சாம்பலாகி நீரோடும் .காற்றோடும் கலந்து விட்டால் உன் பிடியில் இருந்து தப்பிவிடலமென்று தவறாக எண்ணிக்கொண்டேன்  என்று பதில் சொல்வான் .அல்லாஹ்வும் அவனிடம் இருந்த இறை பக்தியையை ஏற்று கொண்டு அவன் பாவங்களை மன்னித்து அவன் மீது இரக்கம் காட்டுவான்    ، فَقَالَ اللَّهُ: كُنْ، فَإِذَا رَجُلٌ قَائِمٌ، ثُمَّ قَالَ: أَيْ عَبْدِي مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ؟ قَالَ: مَخَافَتُكَ - أَوْ فَرَقٌ مِنْكَ - فَمَا تَلاَفَاهُ أَنْ رَحِمَهُ اللَّهُ "                                                                                 
ஆக ஒரு மனிதரிடம் இறை பக்தி தக்வா  இருந்தால் நிச்சயமாக நாளை மறுமை நாளில் வெற்றி அடைய முடியும் .
4.அல்லாஹ்வின் தூதர் [ஸல்]அவர்களை முழுமையாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம் .                           
الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُون                                                                                                                                                                                                                                           
நபி ஸல் அவர்களின் சொல்-செயல் -அங்கீகாரம் ஆகியவற்றை அன்புடன் பின்பற்றுவோ மேயானால்  மூன்று விதமான பயன்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
1.
நமது பாவங்கள் மன்னிக்கப்படும் .
2.
அல்லாஹ்வின் அன்பு கிடைக்கும் .
3.
மறுமையில் சுவனம் கிடைக்கும் .
இந்த மூன்று பயன்களும் ஒரு மனிதருக்கு கிடைத்து விட்டால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .புகாரி                                      عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ [ص:93]، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى»                     
நபி [ஸல்]அவர்கள் சொன்னார்கள் .என் சமுதாயத்தில் உள்ள அனைவரும் சுவனத்தில் நுழைவார்கள் .என்னை மறுத்தவரை தவிர ,உடனே நபி தோழர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே !மறுத்தவர் என்றால் யார் ?நபி அவர்கள் விளக்கமளித்தார்கள் யார் என்னை பின்பற்றினாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார் .யார் எனக்கு மாறு செய்தாரோ அவர் தான் மறுத்தவர் ஆவார் .நபி தோழர்களான சஹாபா பெருமக்கள் நபி [ஸல்]அவர்களை அனுஅனுவாக பின்பற்றினார்கள் .எனவே தான் இவ்வுலகிலும் வெற்றி அடைந்தார்கள் .அல்லாஹ்வின் திருபொருத்ததை பெற்றவர்களாக விளங்கினார்கள் .அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்ற காரணத்தினால் மறுமையிலும் வெற்றி அடையும் பாக்கியம் பெற்றார்கள் .ஆக நபி [ஸல்] அவர்களின் சுன்னத்தை பின்பற்றுவதினால் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் .
5.
அல்லாஹ்வின் திரு வேதமான  குர்ஆன் ஷரிப்பை பின்பற்றுவதினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் .
திருக்குர்  ஆன் என்பது மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக வழங்கபட்ட அருள் மறை .மனிதன் பிறந்ததுமுதல் மண்ணறைக்கு செல்லும் வரை எந்ததந்த காரியங்களில் எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டால் திரு குர் ஆனில் இடம் பெற்றுள்ளது .எனவே தான் திரு குர்ஆனை பின்பற்றுபவர்கள் வெற்றியாளர்கள் என்று திருமறையில் அல்லாஹ் சுப செய்தி கூறுகிறான் . َاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُون                                                                                                                                                                                                                                                        நபிகள் பெருமானார் [ஸல்] அவர்களை அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக்கொண்ட அந்த துக்ககாரனமான நேரத்தில் நபி தோழர்கள் நபி அவர்களை பிரிந்து நிலைகுலைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போன நேரத்தில் அண்ணலாரின் ஆருயிர் தோழர் அபூபக்கர் சித்திக் [ரலி]அவர்கள் அழகாக சொன்னார்கள் .இதோ நம்மிடத்தில் இறைவேதம்    
அல் குர் ஆன் ஷரிப் இருக்கிறது .இதன் மூலம் தான் தனது இறை தூதருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான் .எனவே இந்த குரான் ஷரிப்பை நீங்கள் பற்றிப்பிடித்து அதன் படி வாழுங்கள் .நீங்கள் நேர்வழி அடைந்தவர்கள் என ஆறுதல் சொன்னார் .                                                                                                                                         حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ، الغَدَ حِينَ بَايَعَ المُسْلِمُونَ أَبَا بَكْرٍ، وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ: «أَمَّا بَعْدُ، فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ، وَهَذَا الكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ، فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ»                                                                         
நபி அவர்களும் தனது தோழர்களும் தனது ஹயத்துடைய காலகட்டத்திலேயே முன்னறிவிப்பு செய்தார்கள் .நான் இரண்டு விஷயங்களை உங்களிடத்தில் விட்டு செல்கிறேன் .அவ்விரண்டையும் பற்றி பிடுத்து வாழும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டிர்கள்.
1.
அல்லாஹ்வின் அருள்மறை
2.
எனது வழிமுறை .
ஆக அல் குர் ஆன் ஷரிப்பை பின்பற்றுவதன்மூலமும் வெற்றிநிச்சயம்கிடைக்கும் .

6. பாவங்களைவிட்டு தூய்மையாக இருப்பது நாம் வெற்றி பெறுவதற்கு காரணமாக உள்ளது .     قد أفلح من تزكى                                                
அல்லாஹ்வும் -ரஸூலும் எதையெல்லாம் பாவத்திற்குரிய செயலன எச்சரிதுள்ளார்களோ அவை அனைத்தையும் விட்டு நாம் விலகி இருக்க வேண்டும் .
நபி [ஸல்] அவர்களின் மறைவுக்கு பின் அனஸ் [ரலி] அவர்கள் தனது காலத்தில் வாழ்ந்த இறைனம்பிக்கையளார்களிடம் சொன்னார்கள் .நீங்கள் பல காரியங்களை மிக இலேசாக சர்வசாதரணமாக செய்கிறீர்கள் .ஆனால் அண்ணல் எம்பெருமானார் [ஸல்] அவர்கள் காலத்தில் நாங்கள் அதையெல்லாம் பேரழிவை ஏற்படுத்தும் பாவங்கள் என எண்ணி விலகியிருந்தோம் .இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்த நிலை என்றால் நமது காலத்தை என்ன சொல்ல வேண்டியுள்ளது .மார்க்கத்தில் மிக தெளிவாக ஹராம் என்று சொல்லப்பட்டுள்ள பாவமனகாரியங்கள் வட்டி -மது -பொய் -புறம் -மோசடி என பல விஷயங்கள் நம் மக்களிடம் சர்வசாதரணமாக காணபடுகிறது .இதைபோன்ற அனைத்துபாவங்களை விட்டுநாம் பரி  சுத்தமாக இருந்தால்  வெற்றி நிச்சயம் கிடைக்கும் .பார்க்க புகாரி [6492]
7.தவ்பா செய்தல் என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் .
கடந்த காலங்களில் அல்லாஹ்வுக்கு பிடித்தம் இல்லாத கோபதிர்கூரிய பாவமான காரியங்கள் நாம் செய்திருந்தால் அவை அனைத்திற்கும் மனபூர்வமான முறையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும் .     وتوبوا إلى الله جميعا أيه المؤمنون لعلكم تفلحون   பாவத்திற்கு தவ்பா செய்வதை அல்லாஹ் பிரியப்படுகிறான் .என்பது மட்டுமல்ல தவ்பா செய்தவர்களை நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று நன்மாரையமும் சொல்கிறான் .தவ்பாவிற்கு மூன்று விஷயங்கள் அவசியம் .
1.
செய்த தவறுக்காக மனம் வருந்துவது
2.
தற்பொழுது அந்த பாவத்திலிருந்து விலகி இருப்பது .
3.
இனிமேல் அந்த பாவத்தை செய்யவேமாட்டேன் என் மன உறுதி கொள்வது .
இந்த மூன்று அம்சங்களுடன் அல்லாஹ்விடம் நாம் தவ்பா செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் .
8.
நன்மைகளை பெற்று தரும் நற்கருமங்களை செய்வதும் நாம் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருக்கும் .
وافعلوا الخير لعلكم تفلحون                                                                                                                                         நன்மைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் .
1.
அல்லாஹ்வை வணங்குவது .
2.
அடியாளர்களுக்கு உபகரணம் செய்வது .
தொழுகை-நோன்பு-ஹஜ்-குர் ஆன் ஓதுதல் -திக்ரு -தஸ் பிஹ்  செய்தல் -அல்லாஹ்வை மகத்துவபடுதுதல் -பேச்சுக்களை பேசுதல் இவை அனைத்தும் முதல் வகையில் அடங்கும் ,பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது ,மனைவி மக்களின் கடமைகளை சரிவர நிறை வேற்றுவது -சொந்தபந்தகளுக்கு உதவி செய்வது-அனாதைகளை ,ஏழைகளை ஆதரிப்பது -அண்டை வீட்டார்களுடன் அன்பாக நடந்து கொள்வது -அநிதம் இழைக்க பட்டவருக்கு நீதி பெற்று தருவது -தான தர்மங்கள் செய்வது ,இவை அனைத்தும் இரண்டாவது வகையில் அடங்கும் .ஆக எதுவெல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் ,நன்மையையும்  பெற்று தருமோ அவை அனைத்தும் வெற்றி நிச்சயமாக நமக்கு பெற்றுதறும் .




No comments:

Post a Comment