Thursday 11 April 2013

வெற்றி தரும் உண்மையும் அழிவு தரும் பொய்யும்


வெற்றி தரும் உண்மையும் அழிவு தரும் பொய்யும்
           

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ            

இயற்கையிலேயே ஒரு முஃமினிடம் (நல்ல,தீய) எல்லா தன்மைகளும் இருக்க முடியும். ஆயினும் பொய் சொல்லும் தன்மையும் மோசடி செய்யும் தன்மையும் ஒரு முஃமினிடம் இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : அபூஉமாமா (ரழி) நூல் : முஸ்னத் அஹ்மத்)

                இஸ்லாம் ஓர் உயர்ந்த மார்க்கம் எனவே மனிதன் உயர்ந்தவனாக திகழ நல்ல பண்பாடுகளை கற்றுத் தருவதுடன் தீய செயல்களை தவிர்ந்துக் கொள்ளும்படியும் இஸ்லாம் எச்சரிக்கிறது.

                இஸ்லாம் கற்றுத் தரக்கூடிய பண்பாடுகளில் சிறந்த வெற்றி தரும் பண்பாடு உண்மை பேசுவது,தவிர்ந்துக் கொள்ளக் கூடிய அழிவு தரக்கூடியது பொய் பேசுவது.

                உண்மை பேசும்போது வாழ்வில் எந்தளவு உயர்வு கிடைக்குமோ அதே அளவு  பொய்யை விட்டு தவிர்ந்துக் கொள்ளும்போதும் கிடைக்கிறது.

                அரபியில் உண்மைக்கு (الصدق) என்றும் பொய்க்கு (الكذب) என்றும் சொல்லப்படும்.
                தமிழிலே உண்மைக்கு 3 பெயர்கள் உள்ளது
1.             உண்மை    -     உள்ளத்தில் பொய் இல்லாமல் இருப்பது
2.             வாய்மை    -     உள்ளத்திலும், நாவிலும் பொய் இல்லாமல் இருப்பது
3.             மெய்மை    -     உள்ளத்தாலும், நாவாலும், செயலாலும் பொய் இல்லாமல் இருப்பது.

                உள்ளத்தாலும், நாவாலும், செயலாலும் பொய் இல்லாமல் இருக்கக்கூடிய இந்த மெய்மையைத் தான் இஸ்லாம் (சித்திக்) என்று சொல்கிறது.

உண்மை பேசுவதால் கிடைக்கும் பலன்கள் :

1.                   உண்மை நன்மையை செய்ய வைக்கும் :
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا»

                                                                                                                                                  
                உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும் நன்மை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : இப்னு மஸ்வூத் (ரழி)  நூல் : புகாரி)

2.             உண்மை பேசுவதை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அது நன்மையுடன் சேர்ந்து இருக்கிறது. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ يَهْدِي إِلَى الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّهُ يَهْدِي إِلَى الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ»

                                                                                                                                                   
                உண்மையும், நன்மையும் சொர்க்கத்திலே சேர்த்துவிடும் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : அபூபக்கர் சித்தீக் (ரழி)  நூல் : இப்னு ஹிப்பான்)

3.             உண்மை மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்
                                                                                                                                      
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الكَذِبَ رِيبَةٌ» وَفِي الحَدِيثِ قِصَّةٌ. وَأَبُو الحَوْرَاءِ
           
                உனக்கு எது சந்தேகமாக இருக்கிறதோ அதை விட்டுவிடு. உனக்கு எது சந்தேகமில்லையோ அதை செய். நிச்சயமாக உண்மை மன நிம்மதியை ஏற்படுத்துகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : ஹஸனிப்னு அலீ (ரழி) நூல் : திர்மிதீ)

4.             உண்மை பேசுவதால் உலகின் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும் :

                நான்கு காரியங்கள் உன்னிடம் இருந்தால் இந்த உலகம் உன்னை விட்டும் தவறிவிடாது. அவை
                1. அமானிதத்தைப் பேணுவது    2. உண்மையை பேசுவது
3. அழகிய குணத்துடன் நடந்து கொள்வது. 4. உணவை பேணுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                (அறிவிப்பு : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) நூல் : அஹ்மத்)

5.             உண்மை அல்லாஹ் ரஸுலின் محبة  பெற்றுத் தரும்.
                                                                                                                                                   
                ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் உளூ செய்து கொண்டிருந்த போது அவர்களது மேனியிலிருந்து வழிந்த தண்ணீரை ஸஹாபாக்கள் எடுத்து தடவிக் கொண்டார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸுல் மீதும் உள்ள பிரியத்தால் இவ்வாறு செய்கிறோம் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வும் ரஸுலும் உங்களை நேசிக்க வேண்டுமென்றால் நீங்கள் அமானிதத்தை பேணுங்கள், உண்மையே பேசுங்கள், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் (அறிவிப்பு : நூல்:தப்ரானீ)

7.             உண்மை பேசுபவனுக்கு சுவனத்தின் மத்திய பாகத்தில் இடம் கிடைக்கிறது                                                                                                                                                                                  عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنَا زَعِيمُ بِبَيْتٍ بِرَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ، وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ، وَإِنْ كَانَ مَازِحًا، وَبِبَيْتٍ فِي أَعَلَى الْجَنَّةِ لِمَنْ حُسُنَ خُلُقُهُ

                யார் விளையாட்டுக்கு கூட பொய் பேசுவதை விட்டுவிடுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் மத்திய பாகத்தில் ஒரு வீடு வாங்கித் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : அபூஉமாமா (ரழி) நூல் :شعب الايمان)

8.             உண்மை பேசுவது முஃமினின் அடையாளம் :

                பொய் பேசுவது முனாபிக்குடைய அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே உண்மை பேசுவது முஃமினடைய அடையாளமாக இருக்கிறது.

9.             உண்மை இறையச்சம் உண்டாக காரணமாக அமைகிறது:                   
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ       
                இந்த வசனத்திலே இறையச்சம் உண்டாவதற்கு உண்மையாளர்களுடன் சேர்ந்திருக்க வேண்டுமென்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

                உண்மை பேசுபவருக்கு சொர்க்கம் உறுதி என்று நபி வாக்களித்துள்ளார்கள்.

10.          நீங்கள் ஆறு விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டால் நீங்கள் சொர்க்கம் செல்வதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

1.             பேசினால் உண்மையே பேசுங்கள்
2.             வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றுங்கள்
3.             அமானிதம் கொடுக்கப்பட்டால் பேணுங்கள்
4.             உங்களது மர்மஸ்தானத்தை பேணிக் கொள்ளுங்கள்
5.             உங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள்
6.             உங்கள் கரங்களை அழிவின் பக்கம் போட்டு விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : உபாதத்துப்னு ஸாமித் (ரழி) நூல் : அஹ்மத்)

இந்த ஹதீஸில் சொர்க்கம் செல்வதற்கு முதல் காரியமாக நபி உண்மை பேசுவதைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

                உண்மை பேசுவதால் சில சிரமங்களும் சங்கடங்களும் ஏற்பட்டால் கூட இறுதியில் வாழ்வில் சிறந்த மதிப்பையும் அல்லாஹ்விடத்தில் உண்மையான மதிப்பையும் பெற்றுத் தரும்.

                தபூக் போரின் போது சில பேர் வேண்டுமென்றே போரில் கலந்துக் கொள்ளவில்லை. பின்னர் நபியிடம் பொய்யான காரணங்களைக் கூறி தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் கஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் நபியிடம், "யா ரஸுலுல்லாஹ் : இப்போது நான் உலக சம்பந்தப்பட்ட ஒரு மனிதரின் முன்னிலையில் இருந்தால் அறிவுப்பூர்வமான ஏதேனுமொரு பொய்க் காரணத்தைக் கூறி அவருடைய கோபத்தை விட்டு நான் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட பேச்சு வன்மையை அல்லாஹுதஆலா எனக்கு வழங்கியுள்ளான். ஆனால் தங்களிடத்தில் இன்று நான் பொய் சொல்லித் தங்களைத் திருப்திப்படுத்திவிட்டாலும் அல்லாஹ்வுடைய கோபம் விரைவில் என் மீது ஏற்பட்டுவிடும் என்பதை உறுதியாக நான் அறிந்திருக்கிறேன். எனவே உண்மையான காரணத்தை நான் தெளிவாகக் கூறி விடுகிறேன். அதனால் என் மீது தங்களுக்கு கோபம் ஏற்பட்டாலும் அல்லாஹுதஆலா விரைவில் தங்களுடைய கோபத்தை நீக்கிவிடுவான் என்று நம்பி நான் உண்மையையே கூறி விடுகிறேன்" என்று சொல்லி என்னுடைய நிலைமையைக் கூறினேன்.

                அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் போருக்கு வராமலிருக்க தகுந்த காரணம் ஏதுமில்லை. நான் இப்பொழுது ஓய்வாகவும், செல்வ நிலையிலும் இருந்தது போல் இதற்கு முன் எப்போதும் இருந்ததே இல்லை என்று நான் கூறியவுடன் "உண்மையைச் சொல்லி விட்டீர் நல்லது நீர் எழுந்து செல்வீராக : அல்லாஹுதஆலா உம்முடைய விஷயத்தில் தீர்ப்புச் செய்வான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                இதேபோல இன்னும் முராரா பின் ரபீஃ, ஹிலால் பின் உமய்யா என்ற 2 ஸஹாபாக்களும் உண்மையை கூறினர். இவர்கள் மூன்ற நபர்களுடனும் 50 நாட்கள் யாரும் பேசக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டார்கள்.

                50 நாட்களுக்கு பின் (9:118,119) ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்தான். இந்த சுபச்செய்தியை ஸஹாபாக்கள் கஃப் (ரழி) யிடம் சொன்னபோது கஃப் (ரழி) உடனே போய் நபி (ஸல்) அவர்களை பார்த்து "இறைவனின் திருத்தூதர் அவர்களே! நிச்சயமாக எனது வாய்மையைக் கொண்டு அல்லாஹ் என்னைக் காப்பாற்றி விட்டான் எனது வாழ்நாளில் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன். இது எனது தவ்பாவில் அடங்கியதாகும், என்று கூறினார்.

                மனித வாழ்க்கையை தாழ்த்தி,வீழ்ச்சியடைய செய்து நாசத்தில் கொண்டு போய் சேர்ப்பதாக பொய் இருக்கிறது.

                திருக்குர்ஆவீலே அல்லாஹுதஆலா 26 சூராக்களிலே 34 தடவை பொய்யைப் பற்றிக் கூறுகிறான். சூரா அல்முர்ஸலாத்திலே அல்லாஹுதஆலா சுமார் 10 தடவை

"பொய்யாக்குகிறவர்களுக்கு அந்நாளில் கேடுதான்" என்று எச்சரிக்கிறான்.

                நாசமும் கேவலமும் தரக்கூடிய வீல் என்ற நரகத்தை பெற்றுத் தரக்கூடிய சில பாவங்கள் உண்டு
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ

                1.குறை கூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடு தான்.
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ

                2.(எடையிலும் அளவிலும்) குறைவு செய்பவர்களுக்கு கேடு உண்டாவதாக!
وَيْلٌ لِكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

3.(அல்லாஹ்வின் மீது) பெரும் பொய் கூறுகின்ற கடும்பாவியான ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
                                                                                                               فَوَيْلٌ لِلْمُصَلِّين 
                4.பொடும் போக்காக தொழக்கூடியவர்களுக்கு கேடு தான் என்ற வரிசையிலே
                وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ      

அந்நாளை பொய்யாக்குகிறவர்களுக்கும் கேடு தான் என்று அல்லாஹ் கூறுகிறான்                                                                                  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ»

மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு நாசம் தான் உண்டாகும். அவனுக்கு நாசம் தான் அவனுக்கு நாசம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
                (அறிவிப்பு : முஆவியத்துப்னு ஹைதா (ரழி) நூல் : திர்மிதீ)
                                                                                          

عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَذَبَ العَبْدُ تَبَاعَدَ عَنْهُ المَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ؟»                                                                                                    
ஓர் அடியான் பொய் சொன்னால் அவனுடைய பொய்யின் துர்வாடையினால் மலக்கு ஒரு மைல் தூரம் அவனை விட்டும் தூரமாகி விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) நூல் : திர்மிதீ)
                عَنْ سُفْيَانَ بْنِ أَسِيدٍ الْحَضْرَمِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «كَبُرَتْ خِيَانَةً أَنْ تُحَدِّثَ أَخَاكَ حَدِيثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ، وَأَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ»              

                நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்லி அதை அவர் உண்மை என்று நம்புகிறார். இது மிகப்பெரும் மோசடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்க
                (அறிவிப்பு : சுஃப்யானிப்னு அஸீத் ஹலூரமீ (ரழி) நூல் : அபூதாவூத்)                                                                                                          وَحَدَّثَنِي مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، أَنَّهُ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَكُونُ  
الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: «نَعَمْ» ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: «نَعَمْ» ، فَقِيلَ لَهُ: «أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا» ؟ فَقَالَ: «لَا»
  நபி (ஸல்) அவர்களிடம் "யா ரஸுலுல்லாஹ்! ஒரு முஃமின் கோழையாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டது. நபி : ஆம் இருக்க முடியும் என்றார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டது. நபி, ஆம் இருக்க முடியும் என்றார்கள். ஒரு முஃமின் பொய்யனாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டது. இல்லை, ஒரு முஃமின் பொய்யனாக இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : ஸஃப்வானிப்னு ஸுலைம் (ரழி) நூல் : முஅத்தா பின் மாலிக்)                                                                                                                                                         عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ "

                முனாபிக்கின் அடையாளங்கள் மூன்று :
1.             பேசினால் பொய் பேசுவான்
2.             வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான்
3.             ஒப்பந்தத்துக்கு மோசடித்தனம் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி), நூல் : புகாரீ)

நபி (ஸல்) அவர்களுக்கு கனவிலே பல்வேறு செயல்களும் அதற்கான தண்டனைகளும் காட்டப்பட்டது. அதிலே ஒரு மனிதனை அவனது கன்னங்கள், வாய், மூக்கு, கண் வழியே கொரடு நுழைக்கப்பட்டு பிடரி வரை இழுக்கப்பட்டது. அவன் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது "இவன் வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து போகும் வழியெல்லாம் பொய் சொல்லிக் கொண்டே போவான். அந்த பொய் உலகின் நாலா புறங்களிலும் பரவிவிடும். எனவே அவனுக்கு இந்த வேதனை கியாமத் நாள் வரை நடந்துக் கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டது.
                (அறிவிப்பு : ஸமுரத்துப்னு ஜுன்துப் (ரழி) நூல் : புகாரீ)

                நம்முடைய முன்னோர்கள் தங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக பெரும் தியாகங்கள் செய்துள்ளார்கள். பொய்யின் வாடை கூட தங்கள் மீது வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

                ஒருமுறை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கப்பலில் பயணம் செய்த போது தன்னிடம் 500 தங்கக் காசுகள் வைத்திருந்தார்கள். அதை தெரிந்து கொண்ட ஒருவன் திடீரென்று நான் வைத்திருந்த 500 தங்கக் காசுகளை காணவில்லை என்று புகார் செய்தான். கப்பலில் உள்ள எல்லோரையும் சோதித்தார்கள். புகாரீ இமாம் அவர்கள் தன்னுடைய 500 காசுகளை இவனுடைய காசு என்று நினைத்துவிட்டால் நாம் திருடர் பொய்யராகி விடுவோமே! நாம் திரட்டி வைத்துள்ள பல லட்சம் ஹதீஸ்கள் பொய்யாகி விடுமே என்று பயந்து தன்னுடைய 500 தங்கக் காசுகளை கடலில் தூக்கி போட்டுவிட்டார்கள்.

                தமிழிலே ஒரு பழமொழி உண்டு!
"உண்மை ஊர் சுற்றி வருவதற்குள்
                பொய் உலகம் சுற்றி வந்துவிடும்".
                பொய் அவ்வளவு வேகமாக பரவிவிடும் என்பது கருத்து.

                நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தான் "அஸ்ஸாதிக்" "அல்அமீன்" உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்று வாங்கிய பெயரைக் கொண்டு தான் (இஸ்லாத்தை) தீன் பணியை துவக்கினார்கள்.

                நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கிடைத்தவுடன் அபூகுவைஸ் மலை மீது ஏறி நின்று தன் குடும்பத்தினர்களை எல்லாம் அழைத்து "இந்த மலைக்குப் பின்னாலிருந்து ஒரு பெரிய படை உங்களைத் தாக்க வருகிறது" என்று சொன்னால் நம்புவீர்களா? என்று கேட்டார்கள். மக்களும் "நிச்சயமாக நம்புவோம், நீங்கள் உண்மையாளர்" என்றார்கள்.



"அப்படியானால் இதை விட பெரிய ஆபத்து ஒன்று இருக்கிறது அதிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள ஈமானின் பக்கம் வாருங்கள்" என்று நபி அழைத்தார்கள்.

                நபியின் உண்மைதான் மக்களை நபியின் பக்கம் கொண்டு வந்தது.

                மேலும் நபி உண்மையாளராக இருந்ததால் தான் விரட்டப்பட்ட மக்கா நகருக்கே மீண்டும் ராஜாவாக ஆட்சிக்கு வந்தார்கள்.

                கோயபல்ஸ் தத்துவம் ஒன்று உள்ளது. அதாவது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும்.

                இந்த தத்துவத்தை பலர் நம்புகின்றனர். ஆனால் அந்த பொய்யே ஒரு நாள் அவர்களது கழுத்தை நெறித்து விடும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

                பொய்யர்களால் உண்மையாளர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது. பொய்யர்கள் உலகில் இழிவடைந்து போவார்கள் என்பதற்கு உதாரணமாக ஸஅது (ரழி) வாழ்க்கை இருக்கிறது.

                கூஃபாவில் ஸஅது (ரழி) அவர்கள் ஆளநராக இருந்தபோது அவர்கள் மீது சுமத்தப்பட்டு குற்றச்சாட்டைப் பற்றி விசாரிக்க வந்த குழுவினரிடம் பனுஅபஸ் என்ற பள்ளியில் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து ஸஅது (ரழி) அவர்கள் எங்களுக்கு மத்தியில் சமத்துவமாக பங்கு பிரித்துத் தருவதில்லை. தீர்ப்பளிப்பதில் நீதியாக நடந்து கொள்வதில்லை என்று கூறினார்.

                இதைக் கேள்வியுற்ற ஸஅது (ரழி) அவர்கள் அதிர்ச்சியுற்று "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு பாதகமாக நான் மூன்று பிரார்த்தனைச் செய்கிறேன்" எனக் கூறிவிட்டு "இறைவா! உனது அடியான் உஸாமா இப்னு கதாதா பொய்யராக இருந்ததால் அவரின் ஆயுளை நீளமாக்குவாயாக! அவரின் வறுமையை நீளமாக்குவாயாக! ஆவரை குழப்பங்களுக்கு வைப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

                அந்த பத்துஆவின் காரணமாக உஸாமா இப்னு கதாதா பிற்காலத்தில் தமது இரு புருவங்களும் கண்களின் மீது விழுந்து தொங்குமளவிற்கு முதுமை அடைந்தார். மேலும் வறுமையடைந்து பாதை ஓரத்தில் நின்று கொண்டு அவ்வழியே பாதை ஓரத்தில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்பவராக இருந்தார். யாராவது அவரிடம் கேட்டால் "சோதனைக்குள்ளாக்கப்பட்ட வயது முதிர்ந்த பெயரிவன் நான். ஸஅது (ரழி) அவர்களின் பத்துஆ என்னை அடைந்து விட்டது" என்று கூறுவார்.

                பொய் தற்சமயம் வெற்றி தருவது போல தோற்றமளித்தாலும் நிச்சயமாக ஏதேனும் ஒருநாளில் ஏதேனும் ஒரு முறையில் வீழ்ச்சியும் பாதிப்பும் அழிவும் வந்தே தீரும் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லாஹ் தெளிவான ஆதாரங்கள் தெளிவான விளக்கங்கள்

    ReplyDelete