Friday 19 April 2013

மழை தொழுகை


                         
எல்லா புகழும் அல்லாஹு ஆலா ஒருவனுக்கே உரித்தாகட்டும் .சாந்தியும் ,சமாதானமும்  அருமை நாயகம் [ஸல்] அவர்கள் மீதும் பின்பற்றி வாழ்ந்த சஹாபாக்கள் ,நல்லோர்கள் நம் அனைவர்களின் மீது உண்டாவதாக !
அல்லாஹ்வின் நல்லடியார்களே.!
 இன்று பரவலாக எல்லா இடங்களிலும் தண்ணிர் தட்டுபாடு அதிகரித்துவிட்டது .மழை பெய்வது குதிரை கொம்பாக ஆகிவிட்ட சூழலில் ,மழை இறைவனிடத்தில் கேட்டு பெற என்ன வழி முறைகளை குர் ஆனும் ஹதிஸும் சொல்லி தருகிறது  என்பதையும் ,தண்ணீரின் மகத்துவத்தையும் திரு குர் ஆனிலைஅல்லாஹ் ஆலவால்  நபி [ஸல்] அவர்களுக்கு இறக்கிய ஒரு வசனம் இப்படி சொல்கிறது .                                                 
       وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَاب           
உங்கள் அநிதம் செய்தவரை மட்டுமே குறிப்பாக பிடிக்காத [எல்லோருக்கும் சேர்ந்து வரக்கூடிய ]வேதனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக கடுமையானவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் .


மேற் சொல்லப்பட்ட வசனத்திற்கு ابن عباس  விளக்கம் தருகிறார் .
பாவங்களும்,தீமைகளும் அதிகமாகும் பொழுது அதை தடுக்கமால் பிற முஸ்லிம்கள் வாழுகிற பொழுது அல்லாஹ்வின் வேதனை நல்லவர் ,தீயவர் ,அனைவரையும் சேர்ந்து தான் பிடிக்கும் என்கிறார்கள் -ஆதாரம் -தப்சீர் இப்னு கசிர்

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறுவார்கள்
ஊருக்கு ஒரு பொது வேதனை என்று வந்தால் அது நல்லவர்களையும் சேர்ந்து தான் பிடிக்கும் என்பார்கள் .நபி [ஸல்] அவர்கள்அந்த அடிப்படையில் இன்று குற்றமும் ,குற்றம் செய்கிற கூட்டமும் அதிகம் என்பது கண் கூடாக பார்கிறோம் .குறிப்பாக தண்ணீர் தட்டுபாடு வராத தமிழகத்தில் கூட பயன்பாடிற்கு ,சுய தேவையை நிறைவேற்று வதற்கு கூட தண்ணீர் இல்லையென்ற நிலை .
பருவ மழைகள் பெய்து போய்விட்டது .மாதம் மும்மாரி மழை பெய்யும் என்ற வார்த்தை பொய் ஒருமுறையாவது மழை வராத !என ஏங்க கூடிய இழி நிலை இன்று வந்துள்ளது .குர் ஆனிலும் ,ஹதிஸ்களிலும் வந்துள்ள பொது செய்தி !பாவங்களும் ,பாவிகளும் அதிகம் ஆகும்போது அல்லாஹ்வின் வேதனைகள் கட்டவிழ்கபடும் .அதற்காக எல்லோரும் பாவிகள் என்று சொல்ல முடியாது .அத்தனை பேரும் நல்லவர்கள் என்று உறுதியாக கூற முடியாது .
பாவங்களால் அல்லாஹ்வின் அருள் தடைபடுமா .அல்லாஹ்வின் கட்டளைகள் நபி [ஸல்]காட்டிய வழிமுறைகளை நாம் புறம் தள்ளும் பொழுது இறைவனுக்கு நன்றிகெட்டவர்கலாக மாறும் பொழுது அல்லாஹ் தனது அருட்கொடைகளை பிடித்து வைத்துள்ளான் .நபி [ஸல்]  அவர்கள் சொன்னார்கள் .                                                       
-؛ لحديث عبد الله بن عمرو رضي الله عنهما قال: أقبل علينا رسول الله - صلى الله عليه وسلم - فقال: ((يا معشر المهاجرين: خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن:
ولم يَمْنعوا زكاة أموالهم إلا مُنعوا القطرَ من السماء، ولولا البهائمُ لم يُمطروا.
        
நீங்கள் ஜகாத்தை தடுத்து வைத்து கொண்டால் நாம் மழையை துண்டித்து விடுவோம் .
மேலும் நபி [ஸல்]அவர்கள் கூறுவார்கள் விபச்சாரம் அதிகமாகிறபோது உலகத்தில் பஞ்சம் அதிகமாகும் ,வியாதிகள் அதிகமாகும் என்பது நபி [ஸல்] அவர்களின் வாக்கு .
மழை பெற என்ன வழி : َقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا (10) يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا (11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12)
பாவ மன்னிப்பு கேட்டால் மூன்று விசயங்களை தருவதாக அல்லாஹ் தஆலா வாக்குறுதி தந்துள்ளான் .
1.
தொடர் மழையை அனுப்பி வைப்பேன் .
2.
வாரிசு இல்லாதவனுக்கு வாரிசு தருகிறேன் .
3.
தோட்டங்களையும் ,செல்வங்களையும் வழங்குவான் .இந்த மூன்றும் கிடைக்கும் .
ஒரு சமுகத்தை அல்லாஹ் ஆலா  சோதிக்க மழையை நிறுத்துவான்  அல்லது மழையை அதிகப்படுத்தி அழிப்பான் .வரலாற்றில் நூஹ் [அலை] அவர்கள் கூட்டம் அநிதம் அதிகமான பொழுது உலகத்தை அல்லாஹ் தண்ணீரை கொண்டு தான் அழிப்பான் .குர் ஆனில் விரிவாக அந்த வரலாறு பதிவாகிஉள்ளது .
மழைக்காக வேண்டி கூட்டமாக துஆ செய்து தனியாகவும் ,து செய்ய வேண்டும் ,பாவங்கள் அதிகமாக செய்து விட்டோம் .என சொல்லி சொல்லி அல்லாஹ்விடத்தில் அழுது பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் .வரலாற்றில் எழுதுகிறார்கள் .
சிர்ரி சிக்தி [ரஹ்] அவர்கள் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது .இமாம் அவர்கள் பெரிய ஆன்மீகவாதி ,கற்றரிந்த மூத்த அறிஞ ர் அவர்களிடம் மக்கள் எல்லோரும் சேர்ந்து மழை வருவதற்கு து செய்யுங்கள் .என வேண்டி விரும்பி கேட்ட போது
இமாம் அவர்கள் சொன்ன வார்த்தை இந்த ஊறுக்கு மழைவராமல் போனதற்கு காரணமே நான் செய்த பாவமாக இருக்குமோ !என அஞ்சுகிறேன் . ஒரு வேளை இந்த ஊரைவிட்டு வெளியை போனால் மழை வரலாம் !என கருதுகிறேன் என்று கூறினார்கள் .
உலகத்தில் அல்லாஹ்வின் சிறந்த அருட் கொடைகளில் ஒன்று தண்ணீர் .
உலகத்தில் படைப்புகலின் தேவைகளை நிறை வேற்றும் மாண்பாளன் அல்லாஹ் இருபினும் சில நேரங்களில் சிலர் அருட் கொடைகளை கேட்க சொல்லி மழை பிடித்து தன் வசபடுத்தி கொள்வது அல்லாஹ் தான் .
அல்லாஹ் கூறும் வரலாறு .
மூசா [அலை]அவர்கள் தனது கூடத்தினராக பனு இஸ்ரவேலர்கள் ஒரு தடவை தண்ணீர் இல்லாத இடத்தில் மாட்டி கொண்டு தவித்த போது மூசாவிடம் உன் இறைவன் தண்ணீர் ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் 12 பிரிவினர்களாக இருந்தார்கள் . وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (60)
மூசா [அலை] தனது கூட்டதினற்கு தண்ணீர் புகட்ட தேடிய போது நாம் அவர்களிடம் கை தடியை கொண்டு கல்லில் அடிக்க உத்தர விட்டோம் .12 ஊற்றுகள் வந்தது .இதை ப் சீர்களில் விளக்கம் எழுதும் அறிஞர் கல் இரண்டு கருத்தை சொல்வார்கள் .
1.
நபியாக இருப்பினும் கூட தண்ணீரை து வின் வழியாக தான் கேட்டு பெற முடியும் .
2.
து கேட்டு ஒப்பு கொள்ள பட்டால் கல் ,பாறைகளில் இருந்து கூட அல்லாஹ்வால் தண்ணீர் தர முடியும் .
கொடுத்த அருட் கொடைக்கு நன்றி !
தண்ணீரை தாராளமாக பயன் படுத்தும் பொழுது நம்மில் எத்தனை பேர் நன்றி செலுத்தினோம் என்று யோசிங்கள் நபி [ஸல்] அவர்கள் தண்ணீர் குடித்த பின் இந்த து ஆவை செய்தார்கள் . الحمد لله الذي سقاني عذبا فراتا برحمته ولم يجعله ملحا اجاجا بذنوبنا
புகழ் அணைத்தும் அல்லாஹ்விக்கே !.அவன் எனக்கு மதுரமான மெல்லிய தண்ணீரை புகட்டினான் .மேலும் எங்களுடைய பாவத்தின் காரணமான அந்த தண்ணீரை உப்பகவோ ,கரிப்பகவோ அவன் ஆக்க வில்லை .
தண்ணீர் அவசியம் .உலக அமைப்பில் 72% வீதம் நீரால் நிரம்பியுள்ளது .இறைவனின் பெரும் அருட் கொடைகளில் நீரும் ஒன்று .பழமொழியில்
நீரின்றி அமையாது உலகு என்பர் .ஆனால் இறைவன் ஒவ்வொரு பொருளையும் நீரால் தான் படைத்தான் என்கிறான் .
உலகத்தில் சராசரி மனிதனுக்கு ஒரு நாள் தண்ணீர் சிலருக்கு 110 லிட்டர் தேவை படுகிறது .என்கிறது ஒரு சர்வே .தண்ணீரை பயன்படுத்தாத எந்த உயிரையும் இன்று வரை அல்லாஹ் படைக்க வில்லை .எல்லா தரப்பினரும் நீர் தேவை .ஏன் மரம் ,செடி ,கொடிக்கு கூட நீர்தான் மிக தேவை .இன்னும் சொல்ல போனால் பூமிக்கு கூட நீர் இல்லையென்றால் மௌத்தாகிவிடுகிறது .                                             وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
உலகத்தில் எல்லா பொருளையும் தயார் செய்ய மனிதனால் முடியும் . காற்று அதற்கு உண்டான கருவிகளை தயார் செய்து அதன் மூலம் காற்றை பெற்று கொள்கிறோம் .
வெளிச்சம் ,இருட்டில் தேவை என்கிற பொது மின் விளக்குகளை கொண்டு பெற்று கொள்கிறோம் ,மனிதன் எல்லா பொருளையும் தயாரிக்க இறைவன் கற்று கொடுத்துள்ளான் .சமிபத்தில் பத்திரிக்கை செய்தி பசுமாடுகளை கூட "குளோனிங் "முறையில் தயாரித்து விட்டான் ஏன் மனிதனை கூட குளோனிங் உருவாக்கி விட்ட விஞ்ஞா னதிற்கு ஒரு சவால் என்ன தெரியுமா அவனால் ஒரு சொட்டு தண்ணீரை கூட செயற்கையாக உருவாக்கமுடியாது .
திரு குர் ஆனில் அல்லாஹ் கூறுகிறான் :
 أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
       الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ
 அல்லாஹ்வை தவிர தண்ணீரை யாரும் உற்பத்தி செய்ய முடியாது .எல்லா பொருளையும் காசு கொடுத்து மட்டுமே பெற முடியும் என்கிற உலகம் இது சாதாரண கருவேபில்லையெய் கூட காசு கொடுத்து தான் வாங்குகிறோம் .ஆனால் வனத்திலிருந்து இறைவன் இலவசமாக தருகிறான் .எந்த கட்டணமும் வசூலிக்க படுவதில்லை .ஆனால் அதற்கு இறைவன் கட்டணமாக எதிர்பார்ப்பது நன்றியெய் மட்டும் தான் (56:68,69,70)
தண்ணீருக்கு நன்றி செலுத்த வேண்டாமா  என அல்லாஹ் பல இடங்களில் கேட்கிறான் .
தண்ணீர் இல்லையென்றால் அதை தர இறைவனால் மட்டுமே முடியும். இறைவனிடம் கேட்டு பெற வேண்டும்.
தண்ணீரில் விளையாட வேண்டாம் :
உயிர் நாடியாக இருக்கும் தண்ணீரை இன்று வீண் விரயம் அதிகப்படியாக செய்து விடுகிறோம் .அதிகமாக வீண் விரயம் செய்யும் பொருள் எது என்றால் அது தண்ணீர் மட்டுமே .ஒரு மனிதனின் சராசரி பயன்படுத்தும் தண்ணீர் 110 லிட்டர் என்கிற ஒரு சர்வே அதை விட வீண் விரையம் என பார்த்தல் சராசரி மனிதன் பயன்படுத்தும் அளவை விட வீண் விரயத்திற்கான தண்ணீர் சிலவு மிகைதுவிடுகிறது ஒரு ஆய்வு .
2025-3030
இந்த வருடங்கள் வரும் பொது நீரின் வரத்து குறைந்துபோயி சாப்பட்டுகான கொலைகளும் ,கொலை முயற்சியும் நடக்கும் என்கிறார்கள் .தண்ணீர் குறைவதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்கிறார்கள் .இனி உலகத்தில் மூன்றாம் உலக போர் நடந்தால் குடிக்கும் பச்சை தண்ணீருக்காக வேண்டிதான் இருக்கும் என்று உலக நாடுகள் பயமுறுத்துகின்ற சூழல்கள் இப்போது இருகின்றது .
ஒரு ஹதீஸ் பதிவு :
ஒழு செய்வார்கள் ஆற்றுகருகில் அமர்ந்து மூன்று தடவைக்கு அதிகமாக கழுவும்போது [ஸல்] அவர்கள் இது என்ன வீண் விரயம் என கேட்ட பொது சஹாபி கேட்டார்கள் ஒளுவிலுமா வீண்விரயம் இருக்கிறது என் கேட்ட போது நபி [ஸல்] ஆம் !ஓடும் ஆற்றுக்கு பக்கத்தில் அமர்ந்து ஒளு செய்தாலும் மூன்று தடவைக்கு மேல் எடுத்தாலும் அது அநிதம் என்றார்கள் [ஸல்] அவர்கள் .
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று சொல்கின்ற மக்களிடையில் ஆற்றிலிருந்து எடுத்தாலும் அளவோடு எடு .என நபி [ஸல்] அவர்கள் சொன்னார்கள் .
நபி [ஸல்] அவர்கள் எவ்வளவு தண்ணீரில் ஒளு செய்தார்கள் என ஹதீஸ் பார்த்தால் இன்றைய அளவு 400 கிராம் தண்ணீர் தான் இது அறிவிப்பு .நபி [ஸல்] அவர்கள் குளிப்பதற்கு பயன்படுத்திய தண்ணீர் அளவு     அரபியில் வரும் முக்கால் பாக்கெட் தான் அளவுக்கு சிக்கனமாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினார்கள் [ஸல்] அவர்கள் .வீண் விரயம் அதுவும் தண்ணீரில் செய்தால் அது நம்மை மட்டுமல்ல பிறரையும் பாதிக்கும் .
தேங்கி கிடைக்கும் தண்ணீரிலும் கூட அசுத்தம் செய்யாதே .
عَنْ جَابِرٍ: «عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ»
 தேங்கி கிடைக்கும் தண்ணீர் கூட ஒரு அருட்கொடை தான் அதில் அசுத்தம் செய்ய தடை செய்தார்கள் [ஸல்] அவர்கள்

சுவர்க்கவாதிகளை குர் ஆன் எங்கெல்லாம் பேசுகிறதோ அல்லா நீர் ஊற்றுகலையும் சேர்த்து பேசுவான்
அந்த சுவனத்திற்கு கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்  என்று நீர்  வசதியை பற்றியும் பேசுவான் .
சிக்கனம் தேவை இக்கணம் :
பாவ மன்னிப்பு தேடுவோம் :
மனிதன் வாழும் பொழுது பல தவறுகளை செய்து விடுகிறான் .அதன் சோதனைகளாக அல்லா ஹ் பல்வேறு கஷ்டங்களை இந்த உலகிற்கு கொடுக்கிறான் .பாவ மன்னிப்பு கேட்டால் அழுது புலம்பினால் கண்டிப்பாக அல்லாஹ் மன்னிப்பான் .  
 †¾£…¢ø(…ø) ¦º¡øÅ¡÷¸û.
             ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللهُ بِكُمْ، وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ فَيَغْفِرُ لَهُمْ»
என் உயிரை தன கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக நீங்கள் பாவம் செய்ய வில்லையானால் அல்லாஹ் உங்களை போக்கி விடுவான் .அதற்க்கு பகரமாக பாவம் செய்கிற மக்களை அவன் கொண்டு வருவான் .அவர்கள் பாவம் செய்த பின் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்பார்கள் .அவனும் அவர்களை மன்னிப்பான் என நபி [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள் .
நம் எல்லோரும் பாவ மன்னிப்பு கேட்போம் .எல்லாம் வல்ல அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பாயாக .நம் தேவைகளை பூர்த்தி ஆக்குவானாக .நம் பிழைகளை பொருத்து பிரயொஜனமிக்க பாதுகாப்பான நல்ல மழையை தந்து அருள்வானாக !அமீன் !
மழை தொழுகைக்காக செல்ல கூடியவர்கள் கவனத்தில் வைக்க வேண்டியவைகள் :
மழை தொழுகைகான முக்கிய அம்சம் தவ்பா :
 மழைக்கான பிரார்த்தனையில் அசல் தவ்பா எனும் இஸ்திக்பார் {பாவமன்னிப்பு }ஆகும். எனவே அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்து நபி [ஸல்] அவர்களின் போதனைகளை புறக்கணிக்கும் மனிதர்களின் உரிமைகளை நிறைவேற்றாமலும் மனிதர்களை துன்புறுத்தியும் நடந்த குற்றங்களை ஏற்று பாவ மன்னிப்பு கேட்டால் இறைவான் கருணை மழைகளை பொலியவைப்பான் என்று வந்துள்ளது .ஆதலால் தொழுதும் தான தர்மங்கள் செய்தும் ,உரிமை நிறைவேற்றியும் ,மழை தொழுகைக்காக புறப்பட்டு செல்வது உயிரோட்டமான அமலாகும் .

 மழை வேண்டி தொழுகைகான மஸாயில்கள் :
1) தொழுகைக்காக நடந்து செல்வது சிறந்தது .
2)
எளிய பழைய ஆடைகளை அணிந்து ,ஒட்டு போட்ட ஆடைகளில் புறப்பட்டு          செல்வது மிக சிறந்தது ஆகும் .
3)
தலை குனிந்து பணிவுடன் பயபக்தியுடன் செல்ல வேண்டும்.
4)
மழைக்கான பிரார்த்தனை தொழுகைக்கு புறப்படும் முன் சதகா ,தான தர்மங்கள் செய்து புறப்பட வேண்டும் .
5)
குத்பாவின் பொது மக்கள் மௌனமாக அமைதியாக இருக்க வேண்டும் .
6)
ஓரளவு குத்பா உரை நிகழ்த்திய பின் இமாம் தந்து போர்வையை அல்லது மேலாடையை திருப்பி அணிந்து கொள்வார் .
7)
பொது மக்கள் ஆடை மாற்றி அணிய வேண்டியதில்லை .
8)
குத்பா உரைக்கு பின் இமாம் கிப்லாவை முன்னோக்கி நின்று மழைக்காக மன்றாடி து செய்வார் .
9) 
பொது மக்கள் அமர்ந்த வண்ணம் ஆமீன் என்பார்கள் .
10)
து வின் போது தவ்பா உறுதி படுத்தி கேட்க வேண்டும் .
11)
கைகளை வானத்தின் பக்கம் உயர்த்தி அல்லாஹ்வின் இறை அஞ்சி து செய்ய வேண்டும்
12)
தலைக்கு மேல் கைகளை உயர்த்த தேவை இல்லை .
13)
செல்வதற்கு முன் நோன்பு வைத்து ,தவ்பா செய்து செல்வது மிகவும் சிறந்ததாகும் .
குறிப்பு :
ஜகாத் கொடுக்காதவர்கள் ஜகாத் கொடுத்து விடுவது கட்டாயமாகும் .ஏனேனில் ஜகாத் கொடுக்காததால் மழை தடையாகும் .விளைச்சலும் தடையாகும் .பஞ்சம் பட்டினி ஏற்படும் என ஹதீஸில் வந்துள்ளது .


திருச்சி ஜமாதுல் உலமா நடத்தும் மழை வேண்டி தொழுகை மற்றும் கூட்டு பிரார்த்தனை :

தேதி :21.04.2013    
 கிழமை :ஞாயிரு .
இடம் :உழவர் சந்தை ,அண்ணா நகர் .
நேரம் :காலை 7.30க்கு ஒன்று கூடுதல் .
7.40க்கு தொழுகை விளக்கம் .
தொடர்ந்து தொழுகை து ஆவுடன் .
கவனத்திற்கு :
ஒளுவுடன் ,தொழுகை விரிப்புடன் வருவோம் .
இன்ஷா அல்லாஹ் !








No comments:

Post a Comment