Tuesday 9 April 2013

மனித உயிர்களை மதிக்கும் இஸ்லாம்





கண்ணியமிக்கவர்களை !அல்லாஹ்வின்  படைப்பை  நாம் இரு வகையாக பிரிக்கலாம் !
        1.உயிருள்ளவை          2. உயிரற்றவை                     
உயிர்யற்றவைகளை விட  உயிருள்ளவைகளுக்கு அல்லாஹ்விடம் கூடுதல் மதிப்பும்  அந்தஸ்தும் உண்டு .
உயிருள்ள படைப்புகளை  இருவகையாக  பிரிக்கலாம் .
1.
மனிதன்    2.மனிதனல்லாத மற்ற ஜீவராசிகள் .
இவ்விரண்டில் மனிதனல்லாத மற்ற ஜீவராசிகளை விட மனிதன் அல்லாஹ் மேன்மை படித்திருக்கிறான் .
ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا               
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
மேற்கூறப்பட்ட  மூன்று திருமறை  வசனங்களில் அல்லாஹ்  பயன்படுத்தியுள்ள    சொற்றொடர்கள் மனிதனை மிக உயர்வாக அல்லாஹ்  படைத்திருப்பதை  வாழவைதிருப்பதை மிக தெளிவாக  எடுத்து காட்டுகிறது .

1.அல்லாஹ்வின்  வஸிய்யத் :

மனித உயிர்களுக்கு மதிப்பையும் கண்ணியத்தையும்  அல்லாஹ்  வழங்கியுள்ளான் .எனவே தான் தன் திருமறையில்  எந்த உயிரையும் அநிதமாக கொல்ல வேண்டாம் என மக்களுக்கு வஸிய்யத் [ மிக முக்கிய உபதேசம் ] செய்துள்ளான் .
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

 
النفس        என்ற வார்த்தை  அனைத்து உயிர்களையும்  எடுத்துக் கொள்ளும் .முமினாக இருந்தாலும் சரி -இல்லாவிட்டாலும் சரி .எனவே  எந்த  மனிதரையும்  தகுந்த காரணமின்றி அநிதமாக கொல்வது இஸ்லாமிய பார்வையில் பாவமான  காரியமாகும் .

2.தனி மனிதனை  கொலை செய்வது  மனித இனத்தை  அழிப்பதற்கு  சமம் .ஒரு  மனிதரை
கொலை செய்வது  குற்றம்  என்று சொன்னால் போதுமானது  என்றிருந்தும்  அந்த  குற்றதின்  கடுமையை மக்களுக்கு  விளங்க  வைப்பதற்காக  ஒரு  தனி  மனிதனை  கொலை செய்வது  மனித  குலம் அனைத்தையும் அழிப்பதற்கு சமம்  என்று குர் ஆன்  ஷரிபில்  அல்லாஹ் அழுத்தமாக  சொல்கிறான் .
. أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

3.அண்ணலாரின்  எச்சரிக்கை :

அண்ணல் எம் பெருமானார் [ஸல் ] அவர்கள் பெரும்பாவங்களை  பட்டியலிடுகிற  பொழுது  அல்லாஹ்விற்கு இணை  வைப்பதற்கு  அடுத்த படியாக  மனிதனை  கொலை  செய்வதை  பெரும்  பாவம்  என்று  குறிப்பிட்டார்கள் .
عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ "
நாளை  மறுமை நாளில்  முதன் முதலாக  மனிதர்களிடையே  வழங்கப்படும்  தீர்ப்பு  கொலைகள்  தொடர்பனதாகத்தான்  இருக்கும்  என்ற  நபிகளாரின்  எச்சரிக்கை  கொலை செய்தல்  என்ற  பாவத்தை  விட்டும்  நாம்  தவிர்ந்திருக்க வேண்டும்  என்பதை  உணர்த்துகிறது .
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ»

4.தற்கொலை  செய்வது  பாவம்  :
                மனித உயிர்  விலை  மதிப்பற்றது  என்ற காரணத்தினால்  தான்  ஒரு மனிதன்  தன் சொந்த  உயிரை  மாய்த்துகொள்வதையும்  இஸ்லாம் தடை  செய்துள்ளது .நபிகள் பெருமானார் [ஸல் ] அவர்கள் சொன்னார்கள் எந்த விதத்தில் ,எந்த ஆயுதத்தைக்கொண்டு  தன்னை  ஒரு மனிதர்  தற்கொலை செய்துகொள்கிறாரோ அதே விதத்தில்  நாளை  மறுமை  நாளில்  நரகில்  அவர்  வேதனை  செய்யப்படுவார்  என கடுமையாக  எச்சரித்தார்கள் . ஒரு மனிதர்  கூர்மையான  இரும்பிலான ஆயுதத்தைகொண்டு தன்னை  தானை  தற்கொலை  செய்துகொண்டால்  அதே போன்று  நரகில்  கூர்மையான  இரும்பு  ஆயுதத்தின்  மூலம்  வேதனை  செய்யப்படுவார்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا،
சம்பவம் :
நபி [ஸல் ] அவர்கள்  காலத்தில்  நடைபெற்ற  கைபல்  போரில்  இஸ்லாமிய படையில்  போரிட்ட  ஒரு முஸ்லிமை  சுட்டிகாண்பித்து இவர்  நரகவாசி என்று பெருமானார் [ஸல்] அவர்கள் சொன்னார்கள் . நபிதோழர்களுக்கு மிகப்பெரிய  வியப்பு . காரணம் எதிரிகளை  துவம்சம்  செய்து போர்களத்தில்  அவர் மிக கடுமையாக  இஸ்லாத்திற்காக போரிட்டுக்  கொண்டிருந்தார் .அவரை சில நபிதோழர்கள்  கண்காணிக்க ஆரம்பித்தார்கள் .திடீர் என அவருக்கு பலத்த காயம் எதிரிப்படை வீரர்களினால் ஏற்பட்டுவிட்டது . அதன்  வேதனை தாங்க முடியாமல் சில வினாடிகளில் தன் வாளினால்  தன்னை தானே குத்தி கொண்டு  இறந்து போனார் .இந்த  காட்சியை  பார்த்துக் கொண்டிருந்த சஹாபாக்கள் நபிகளாரிடம் ஓடோடி வந்து
                                                                                         
அல்லாஹ்வின்  தூதர் அவர்களே ! உங்களின் பேச்சை அல்லாஹ் உண்மை படுத்திவிட்டான்  என்று சொன்னார்கள் .ஆக ஒரு மனிதர் தன்னை தானே தற்கொலை செய்து கொண்டாலும் நரகத்திற்கு செல்வார் என்ற நபிகளாரின் எச்சரிக்கை மனித உயிரின் மதிப்பை விளங்க செய்கிறது.[ ஹீஹுல்  புகாரி ].

5.போர்களத்திலும் மனித உயிர்களை மதிக்க கற்றுகொடுத்தது  இஸ்லாம் .பொதுவாக போர் என்று வந்து விட்டால் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை உலகம் எந்த மனிதாபிமான மரபுகளையும்  மதிப்பதில்லை . ஆனால் இதில் இஸ்லாம் விதி விலக்கானது . இறை தூதர் [ஸல்] அவர்கள் போருக்கு செல்லும் தங்கள் படை வீரர்களுக்கு அழுத்தமான இரண்டு  அறிவுரைகளை  பகிர்ந்துள்ளார்கள் .
1.
போர் செய்வதற்கு தகுதி இல்லாத பெண்களை , குழந்தைகளை ,வயோதிகர்களை ,நோயாளிகளை  கொல்லதிர்கள் .
2.
எதிராளிகள் சமாதானத்திற்கு இணங்கி வந்து விட்டால் போரை நிறுத்தி விடுங்கள் .அதன் பிறகு அத்து மீறி தாக்கி கொள்ளாதிர்கள் [நூல்  புகாரி ].
மனித உயிர்களுக்கு மாநபி [ஸல்] அவர்கள்  மதிப்பளித்த காரணத்தினால் தான் மேற்கூறிய உபதேசத்தை  சொன்னதோடு மட்டுமல்லாமல் தங்கள் வாழ்கையில் நடைமுறை படுத்தியும் காட்டினார்கள் -[பார்க்க -புகாரி -3587-3566].
6. கொலை செய்தவனை கொல்ல வேண்டும் என்ற இறை சட்டமும் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லபட்டதுதான் .
மூன்று காரணத்திற்காக ஒரு  மனிதரை கொலை செய்யலாம்  என்று பெருமானார் [ஸல்] அவர்கள் சொன்னார்கள் .அதில் ஒன்று                                                                       

ஒரு மனிதரை கொலை செய்ததற்கு பகரமாக அவரை கொலை செய்வது [நூல் -புகாரி -3464] 
படைத்த இறைவனும் தன் திருமறையில்


அறிவுடையோரை !பழிக்குபழி வாங்குவதில் உங்களுக்கு நல் வாழ்வு உண்டு  என்று கூறுகிறான் .நன்கு சிந்தித்து பார்த்தோமானால்  இதுவும் ஒரு வகையில் மனித உயிர்களை பாதுக்காக எடுக்கப்பட்ட ஆப் ரேசன்  முயற்சி தான் .மருத்துவர் சொல்கிறார் .உங்கள் காலை எடுக்க வேண்டும் .அது அழுகி விட்டது .அதை விட்டுவைத்தால் பிறகு மொத்த உறுப்புகளையும்  அழுக வைத்துவிடும் .மொத்த உறுப்புகளையும் பாதுக்காக வேண்டும் என்பதற்காக காலை துண்டித்து எடுப்பதை போல ,மற்ற மனித உயிர்களை பாதுகாபதற்காக கொலை செய்தவனை கொல்ல சொல்கிறது இஸ்லாமிய மார்க்கம் .ஒரு வேளை இவனை தண்டிக்காமல் உயிரோடு விட்டு வைத்தால் இன்று ஒரு மனிதரை கொலை செய்தவன் நாளை நூறு மனிதரை கொலை செய்யலாம் .

7.பலிக்கு பலி என்ற அடிப்படையில்  கொலை செய்தவனை கொல்வதற்கு அனுமதி அளித்த இஸ்லாம் அந்த கொலையாளியின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு கொலை செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு அவனை மன்னித்து நஷ்ட ஈடு  பெற்றுகொள்ளமே என்று அறிவுரையும் பகர்கிறது .

فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ


கொலையாளியை மன்னித்து அவனை வாழ வைக்கும் உரிமையை கொலை செய்யப்பட்ட குடும்பத்தாரின்  விருப்பத்தில் அல்லாஹ் வழங்கி விட்டு -அதனை ஊக்குவிப்பது மனித உயிர்களுக்கு இஸ்லாம் மதிபளிப்பதை எடுத்து காட்டுகிறது .

8.பெரும் பாவங்கள் என்று பெருமானார் [ஸல்] அவர்கள் பத்து விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள் .அவைகளில் அநிதமாக ஒரு மனிதரை கொலை செய்வதும் ஒன்று .உலகின் முதன் முதலில் நடைபெற்ற கொலை சம்பவம் முதல் மனிதரான ஆதம் [அலை ] அவர்களின் மூத்த மகன் காபில் தனது சகோதரர் ஹாபிலை கொலை செய்தது தான் .



நபி [ஸல்]அவர்கள் சொன்னார்கள் :
அநியாமாக கொல்லப்படும் எந்த மனித உயிராயினும் அதை கொலை செய்த பாவத்தில் ஆதம் {அலை} அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருந்தே தீரும் .இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கொலையை தவிர வேறு எந்த பாவத்திற்கும் குறிப்பிட்டு நபி {ஸல்] அவர்கள் மேற்கூறிய வார்த்தையே சொல்லவில்லை .உதாரணமாக முதன்முதலாக யார் விபச்சாரம் செய்தாரோ அவருக்கு பின்னால் விபச்சாரம் செய்பவர்களின் பாவத்தில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு என்று குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லவில்லை .என்ற விஷயம் கொலை செய்தல் என்ற பாவத்தின் கடுமையை நமக்கு உணர்த்துகிறது .மனித உயிரை மதிக்க வேண்டும் என்பதை நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள் .

9.வாரிசு என்ற அடிப்படையில் சொத்துகளை பெரும் தகுதியுள்ள ஒருவர் தனது உறவினரை [உதாரணமாக மகன் -தந்தை ]கொலை செய்தால் வாரிசு என்ற அடிப்படையில் சொத்துகள் அவனுக்கு வழங்கபடாது  என்ற இஸ்லாமிய சட்டமும் மனித உயிரை பாதுகாக்க வேண்டும் .
மதிக்க வேண்டும் என்பதை தான் எடுத்து காட்டுகிறது .அதே போன்று நோயாளி அல்லது காயம் ஏற்பட்டவர் குளிப்பு கடமையான நிலையில் குளித்தால் இறந்து போய்விடுவார் என்ற சூழ்நிலை இருந்தால் அவர் குளிக்க தேவையில்லை .தயம்மம் செய்தால் போதுமானது என்ற சலுகைகளையும் மனித உயிரை பாதுக்காக வேண்டும் என்ற அடிப்படையில் வழங்க்கபட்ட மார்க்க சட்டம் தான் .

10.மனித உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்ககூடிய  அனைத்து வஸ்துகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது .உதாரணமாக மதுபானம் ,போதை வஸ்துக்கள் .இரத்தம் .பன்றிக்கறி .இறந்த பிராணியின் மாமிசம் போன்றவை .
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُون
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَ
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
சொல்லால் -செயலால் கொலையைய தூண்டக்கூடிய அணைத்து விஷயங்களையும் இஸ்லாம் முழுமையாக தடை செய்துள்ளது .உதாரணமாக பொறாமை ,பகைமை ,கோபம் ,அநீதம் ,மோசடி செய்தல் ,ஏமாற்றுதல்  இவை அனைத்தும் சிறு குற்றங்களாக தெரிந்தாலும் இது முற்றி முடிவு பெறுவது கொலையில் தான்  என்ற காரணத்தினால்  ஆரம்பத்திலேயே இவைகளை தடை செய்து மனித உயிர்களை காப்பாற்றுகிறது இஸ்லாம் .சுருங்க சொன்னால் அல்லாஹ்வும்- அல்லாஹ்வின்  இறை தூதர் [ஸல்] அவர்களும் எல்லா நிலைகளிலும் மனித உயிர்களையும் -மனித விழுமங்களையும் -மனிதபிமானங்களையும் இஸ்லாமிய மார்க்கத்தில் மதிக்க கற்று கொடுத்துள்ளார்கள் .வல்ல அல்லாஹு ஆலா  மனித உயிர்களை மதித்து வாழும் நன்மக்களாக நம் அனைவர்களையும் ஆக்கி அருள் புரிவனாக !ஆமீன் .








1 comment:

  1. Casino Games Near Me - MapyRO
    A map showing casinos and other gaming facilities located near 성남 출장안마 you. At 진주 출장안마 Casino 전라남도 출장마사지 World Sydney, you 대전광역 출장샵 can play online slots or find other 강원도 출장샵 games. Rating: 3.6 · ‎9 votes

    ReplyDelete